நரேந்திரமோடியின் அரசு நிர்வாகத்திலோ அல்லது பாரதீய ஜனதா கட்சி செயல்பாட்டிலோ ஆர்.எஸ்.எஸ். ஒருபோதும் தலையிடாது என ஆர்.எஸ்.எஸ். செய்தி தொடர்பாளர் ராம் மாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக புதிதாக பதவியேற்க உள்ள பா.ஜ.க அரசின் அரசின் செயல்பாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வழக்கம்போல் தலையிடும் என்றும் இதனால் குழப்பங்கள் ஏற்பட்டு, காலப்போக்கில் அரசுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் பரவலாக தகவல் வெளியானது.
இதையடுத்து ஜெய்பூரில் இதுபற்றி ஆர்.எஸ்.எஸ் தேசிய செய்தி தொடர்பாளர் ராம் மாதவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பாரதீய ஜனதா கட்சி செயல்பாட்டிலோ ஆர்.எஸ்.எஸ். ஒருபோதும் தலையிடாது. அதே சமயத்தில் அரசோ, கட்சியோ ஆலோசனைகள் கேட்டால், அதற்கு ஆர்.எஸ்.எஸ். பதில் கொடுக்கும் என்று கூறினார்.
மேலும் பா.ஜ.க தலைவர்கள் ஆர்.எஸ். எஸ் தலைவர்களை சந்திப்பது எனபது ஒரு வழக்கமான ஒரு நடைமுறைதான் என்று கூறினார்.
ஆரம்பத்தில் அப்படித் தான் சொல்ல்வீர்கள். அப்புறம் ராமர் ஆலயம் கட்ட வேண்டுமென்று மோடிக்கு நெருக்குதல் கொடுப்பீர்கள்! எங்காவது மசூதியை இடிப்பீர்கள்!! மோடியும் உங்களிடம் பாடம் கற்று வந்தவர் தானே !!!