தமிழகத்திற்கு ஒத்துழைப்பு: ஜெ.,யிடம் மோடி உறுதி

modi_jayaசென்னை:லோக்சபா தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு, நரேந்திர மோடி தொலைபேசியில் நன்றி தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில், பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில், ஆளும் அ.தி.மு.க., 39க்கு, 37 இடங்களைப் பெற்று, மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.பா.ஜ., வெற்றி பெற்றதை தொடர்ந்து, நேற்று முன்தினம், முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று பிற்பகல், முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நரேந்திர மோடி, கடிதத்திற்கு நன்றி தெரிவித்தார்; அத்துடன், தமிழகத்தில், அ.தி.மு.க., வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தொடர்ந்து, நாட்டின் பிரதமராக வெற்றிகரமாக பணியாற்ற, மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ‘தமிழக அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பையும் நல்கும்’ என, மோடி முதல்வரிடம் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், பா.ஜ., தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு தன் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Click Here
TAGS: