வைகோவிற்கு கவுரவ பதவி வழங்க பாஜக திட்டம்

ycobalaமதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு பாஜக கவுரவ பதவி வழங்கி சிறப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேற்று டெல்லியில் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ள அவர், பின்னர் பாஜக தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத்சிங், பஞ்சாப் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆகியோரையும் சந்தித்து பேசியுள்ளார்.

இதுபற்றி ராஜ்நாத்சிங் கூறும்போது, இந்த மகிழ்ச்சியான வெற்றியில் நீங்கள் தோல்வியை சந்தித்தது வருத்தமாக உள்ளது என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

அதற்கு, தேர்தலுக்கு முன்பே மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்று நீங்கள் தொலைநோக்கு பார்வையுடன் அறிவித்தது தான் பாஜக வெற்றிக்கு காரணம் என்று பதில் அளித்துவிட்டு பின்னர் சென்னை திரும்பினார்.

இந்நிலையில், தேர்தலில் வைகோ தோல்வி அடைந்தாலும் அவரை மேல்சபை எம்.பி.யாக்க பாஜக தலைவர்கள் திட்டமிட்டனர்.

ஆனால், வைகோவின் நெருங்கிய நண்பரும், பஞ்சாப் முதலமைச்சருமான பிரகாஷ்சிங் பாதல் இதற்கான முயற்சியில் ஈடுபட்டபோதும், வைகோ மறுத்துவிட்டார்.

இதனையடுத்து, வைகோவுக்கு மத்திய அரசில் கவுரவமான பதவி வழங்க பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஏற்பட வைகோ முக்கிய காரணமாக இருந்ததால், திட்டக்குழு துணைத் தலைவர் பதவி போல் அரசியல் அல்லாத ஒரு பதவி வைகோவுக்கு வழங்கப்பட வேண்டும் என மதிமுகவினர் எதிர்பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TAGS: