இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவுக்கு அழைக்கப்பட்டிருப்பது குறித்து மதிமுக தலைவர் வைகோ எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இன்று இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஏற்கனவே இலங்கைப் போரில் இந்திய அரசு இலங்கைக்கு உதவி செய்தது என்ற குற்றச்சாட்டை இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசு எதிர்கொண்டது. தமிழக மீனவர்களின் நலனையும காக்க அது தவறிவிட்டது. இந்த சூழ்நிலையில், நரேந்திர மோடி அவர்களின் தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவி ஏற்கும் விழாவிற்கு, இராஜபக்ஷவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இராஜபக்ஷ கலந்து கொள்ள இருப்பதாகவும் வந்த தகவல் “பேரிடியாகத் தாக்குகிறது” என்று கூறியிருக்கிறார்.
இந்தியாவுக்கு இராஜபக்ஷ வருவதை எந்தவிதத்திலும் தமிழர்களால் சகித்துக் கொள்ள இயலாது, என்று கூறியிருக்கும் வைகோ, ” ராஜீய சம்பிரதாயங்கள் என்பதெல்லாம் கவைக்கு உதவாதவை. தங்கள் நாட்டுக் குடிமக்கள், இன்னொரு நாட்டு இராணுவத்தால் கொல்லப்பட்டால், உடனே அந்த நாட்டுடன் ராஜீய உறவுகளை, பாதிக்கப்பட்ட நாடு துண்டித்துக் கொள்கிறது. எனவே, சார்க் நாடுகளுக்கு அழைப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறியிருக்கிறார்.
1998-99 ஆம் ஆண்டுகளில் வாஜ்பாய் அரசு பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோதும், 2004,09 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோதும் இலங்கை ஜனாதிபதி அழைக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மகிந்த ராஜபக்ஷ, புது தில்லி பதவி ஏற்பு விழாவுக்கு வர அனுமதிக்கப்பட்டால், அந்த நிகழ்ச்சி தமிழ் இன மக்களுக்கு துக்கத்திற்கும், வேதனைக்கும் உரிய நிகழ்ச்சியாகவே அமையும் என்றும் வைகோ கூறியிருக்கிறார்.
எனவே மஹிந்த ராஜபக்ஷவை , பதவி ஏற்பு விழாவில் பங்கு ஏற்க, அனுமதிக்க வேண்டாம் என்று, பிரதமர் ஆகப் போகின்ற நரேந்திர மோடி அவர்களையும், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் அவர்களையும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும், இருகரம் கூப்பி வேண்டுகிறேன் என்று கூறியிருக்கிறார் வைகோ. -BBC
இதுமட்டுமே உனது சரியான முடிவு ..பார்ப்போம் ஸ்ரீ லங்கா கொலை வெறியன் அரசில் இருந்து ஒருத்தனும் வரக்கொடாது …செல்வி ஜெயலலிதாவும் இந்த முடிவை அறிவிக்க வேண்டும் ..இது தமிழர்கள் மீது சத்தியமான ஆணை நடக்கணும்.
வைகோ இருகரம் கூப்பி வேண்டி ஒன்றும் ஆகப்போவதில்லை. என்ன- மோடி அந்த தமிழர் துரோகியை கூப்பிட்டு தனிமையில் கண்டிக்க முடியும்– திராணியிருந்தால். முன்பு ரஷ்ய எரிபடைகளை கியூபாவிலிருந்து நிறுத்தப்பட்ட போது அதிபர் கென்னெடி எடுத்த முடிவு குருச்சாவை கியூபாவிலிருந்து தன்னுடைய எரிபடைகளை திரும்பபெற்றுக்கொண்டது – கென்னெடி உறுதியுடன் செயல் பட்டதினால் தான் அது முடிந்தது. ஆனால் சீனா இலங்கையில் என்ன செய்கின்றது? அதை கேட்க தைரியம் இல்லா இந்திய அரசு என்ன செய்ய முடியும் என்று காலம் சொல்லும்– அதற்குள் சீனா தனக்கு சாதகமாக எவ்வளவோ செய்து கொள்ள முடியும், கிரிஷ்ணமேனநிலிருந்து இதுநாள் வரை மலையாளிகள் எப்படி இந்திய தற்காப்பு அமைச்சில் எப்போதும் இருக்க முடிகிறது? ஈழப்போர் போது நம் உடன் பிறப்புகளின் அழிவை கண்டும் காணாமல் இருந்த மலையாளிகளும் தான் நமக்கு துரோகிகள்.
எதிரியை அருகில் அழைத்து மெல்ல மெல்ல கொல்வது ராஜா போர் தந்திரம்! உலக பார்வையில் தங்கள் உரிமைக்காக போராடிய ஈழ தமிழர்களை பயங்கரவாதிகளென முத்திரை குத்தி பல பேடி நாடுகளுடன் கூட்டு சேர்ந்து இன படுகொலையை செய்தவனை சரியான வழியில் கையாளவேண்டும்!
அன்று காங்கிரஸ் ஆட்சியில் : ஆவேச பேச்சு + எதிர்ப்பு + போராட்டம்
இன்று பாரதிய ஜனதாவிடம் : இருகரம் கூப்பி வேண்டுகிறேன்
மகிந்த ராஜபக்சே புதுடில்லி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு விட்டால், என்ன செய்ய போகிறீர்கள் ??? தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற போகிறீர்களா ??? அல்லது
” கசாப்பு கடையில் நாங்களும் பங்குதாரர்கள், ஆனால் நங்கள் சைவ சித்தாந்திகள் ” என்று கூறி கூட்டணியில் இருக்க போகிறீர்களா ???
வெரி சிம்பல் மிஸ்டர் வை கோ ! வேண்டுகோளும் வேண்டாம் வெங்காயமும் வேண்டாம் , கொலைகாரன் வரக்கூடாது , அப்படி வந்தால் தமிழன் ஒருவனும் அங்கே வரமாட்டான் ! இனி எப்போது உங்களுடன் கூட்டும்மில்லை , உறவும்மில்லை என்று வெட்டு ஓன்று -துண்டு இரண்டு என்று எச்சரியுங்கள் , தைரியம் இருந்தால் ???
ராமதாஸ், வைகோ மற்றும் உள்ள பல சில்லரை கட்சிகள் அவ்வப்போது ஆ ஊ என்று கத்தி இன்னும் அரசியலில் இருப்பதாக காட்டிக்கொள்வார்கள். மற்றபடி ஒன்றும் pull பண்ணமுடியாது. ராமதாஸ் கலைஞரை விட சாணக்கியர். எந்த குதிரையில் ஏறினால் ஜெயிக்க முடியும் என்று அறிந்தவர். வெல்லப்போகும் குதிரையின் புகழ் பாடி ஒட்டிக்கொள்வார் பிறகு அக்குதிரை எட்டி உதைத்ததும் வைவார். இப்போதுகூட மோடியின் புகழால்தான் வெல்லமுடிந்தது. மற்றபடி பாமகவுக்கு ஜாதி ஒட்டு தவிர ஒன்றும் கிடையாது. இப்போது அன்புமணி ராஜபக்ஷேவை புறக்கணிக்க சொல்லி மோடியுடன் மோதுவரா?. சும்மா சத்தம் போட்டுவிட்டு அவர் போன பின்பு நாங்களும் போராட்டம் நடத்தினோம் என்று மக்கள் மறந்த பின் அடங்கி விடுவார்கள் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.
.
இது மருத்துவர் ராமதாஸ் யாவுக்கு தெரியுமா .
மோடியை எடை குறைத்து மதிப்பிடாதிர்கள். நிச்சயமாக ராஜ தந்திரம் இருக்கும்”
அன்புமணி, அவர் அப்பன் ராமாதாஸ் இதைப் பற்றியா அலட்டிக் கொள்ளப் போகிறார்கள். அவர்களுக்கு ஜாதியை சொல்லி தமிழர்களை பிளவு படுத்துவது தானே அவர்களின் நோக்கம்..மேலும் அவர்களுக்கு வேலை திராவிடக் கட்சிகளை குறை சொல்லிக் கொண்டிருப்பது தான். !!! ஆனால் வை.கோ.-வையும் விஜயகாந்த்தையும் மட்டும் பக்கத்தில் வைத்துக் கொள்வார்,மகனின் வெற்றிக்காக !!!