இந்தியப் பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுத்திருக்கிற இந்த துர்ப்பாக்கியமான செயல் தமிழ்நாட்டு மக்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய உணர்வுகளை மீண்டும் காயப்படுத்தியுள்ளது. இந்தச் செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதிய பாரதப் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு இந்தியாவின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு, அந்த அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்ற கவலை தரும் செய்தியை ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன்.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில், தமிழ்நாட்டு மக்கள், மற்றும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் ஆகியோரின் மனஎழுச்சி மற்றும் கொந்தளிப்பு அனைவரும் நன்கு அறிந்தவையே. நாடாளுமன்ற மக்களவைக்கு பொதுத் தேர்தல் நடைபெற்று, ஒரு சில நாட்களில் புதிய மத்திய அரசு பதவியேற்க இருக்கிறது என்றாலும், இந்த மாற்றம், தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையே ஏற்கெனவே உள்ள இறுக்கமான உறவில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதியில், இலங்கை தமிழர்களுக்கு எதிராக இலங்கை அதிபர் ராஜபக்சே அரசின் இலங்கை இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் இன அழிப்பு ஆகியவை குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை இந்த நாடே, ஏன் இந்த உலகமே நன்கு அறியும்.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்று நாங்கள் கோரிக்கை விடுத்ததோடு, போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை புரிந்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தி, விசாரணைக்கு அவர்களை உட்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் ஒன்றை இந்தியா முன்னின்று கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
ஆனால், முன்பிருந்த மத்திய அரசு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய தீர்மானங்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி, தமிழர்களின் உணர்வுகளை மிதித்துவிட்டது. புதிதாக மத்தியில் அமையவிருக்கும் அரசு, தமிழர்கள் தொடர்பான பிரச்சனைகளில் பரிவுடன் செயல்படுமென்றும், தமிழ்நாட்டுடன் நட்புணர்வு பாராட்டும் என்றும் நாங்கள் நம்பினோம்.
ஆனால், புதிய பிரதமரும், புதிய மத்திய அரசும் பதவியேற்று செயல்படத் தொடங்குவதற்கு முன்னரே, இந்தியப் பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுத்திருக்கிற இந்த துர்ப்பாக்கியமான செயல் தமிழ்நாட்டு மக்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய உணர்வுகளை மீண்டும் காயப்படுத்தியுள்ளது. இந்தச் செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
புதிதாக மத்தியில் அமையவுள்ள அரசிடம் இதனை மிகுந்த மன வேதனையுடன் நாங்கள் சுட்டிக்காட்ட விழைகிறோம். தவறான ஆலோசனையின் பேரில் அமைந்த இந்தச் செயல் தவிர்க்கப்பட்டிருந்தால், புதிதாக அமையவுள்ள மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவற்றுக்கு இடையேயான உறவு சிறப்புடையதாக அமைந்திருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பை மஹிந்த ராஜபக்ச உறுதிப்படுத்தினார்
இந்திய புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் தாம் பங்கேற்பதை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவின் வெளியுறவு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் செய்யத் அக்பருதீன் இன்று வழங்கிய தகவலில் மே 26 ஆம் திகதியன்று நடைபெறும் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பு குறித்து மஹிந்த ராஜபக்ச உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவுடன் சார்க் நாடுகளின் தலைவர்களும் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும் நிகழ்வில் மஹிந்தவின் பங்கேற்புக்கு தமிழக தலைவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மோடிபக்ச,ராஜபக்ச, ரெண்டும் ஒரு குளத்தில் உரிய மட்டைகள்.இந்த வைகோ, ராமதாஸ்,சீமான், தமிழருவி மணியன்,பழ நெடுமாறன், இன்னும் பல தமிழ் ஆர்வலர்கள் என்னப்பா செய்றிங்க, உங்க தலைவர் மோடிபக்ச என்ன காரியம் செய்கிறார்,நீங்களெல்லாம் என்னத்த பு…. இருகிங்கே.
அன்புமணி ராமதாஸ் மினிஸ்டர் பதவிக்கு ஆசைபடுகிறார் . இந்த நேரத்தில் மோடியிடம் எப்படி அய்யா எதிர்ப்பார் .
தமிழா ஆட்டு மந்தை மாதிரி எப்பவும் ஒரு பக்கமாக கூட்டு சேராதே.
இதக்ண்டா தமிழன் ,,நண்டும் தமிழனும் ஒன்னு
மோகனமான நண்டுக்கு தமிழன் உணர்வு இல்லை என்று நன்றாகவே தெரிகின்றது. அப்புறம் ஏன் தமிழன் நண்டு வாயில கைய வைக்கணும்?. இனிமேல் தமிழன் நண்டும் கடிக்கும்.
மன்னிக்கவும் நண்டு என்று வேற வளாகத்தில் ஏலத வேண்டியதை இதில் எழுதிவிட்டேன்
Theni அவர்களே எனக்கு தமிழுணர்வு இருக்கோ இல்லையோ ,நீ தமிழ் உணர்வோடு நடந்துக்கோ அது போதும் ,ஊருக்கு உபதேசம் தேவை இல்லை ,தன் முதுகை பார்த்தல் நல்லது
அய்யா தமிழ் ஈழ ஆர்வலர்களே என்ன அய்யா பன்றிங்கே, மோடி வந்து காப்பாத்துவார்ன்டு சொன்னிங்கே, இப்ப நீங்களெல்லாம், எந்த முகத்தை வைத்து மக்களை சந்திபிங்கே. திராவிடன் பிரதமர வரணும் அப்பவாது தமிழ் ஈழதிற்கு ஒரு முடிவு கிடைக்குதாண்டு பார்ப்பும். தமிழ் மலர் பத்திரிக்கை கடைசி பக்கத்தில் ஒரு தகவல் வந்தி இருக்கு. என்னத்த சொல்ல.எல்லாம் ஆரியத்திற்கு அடிமை ஆயிட்டிங்கே.தமிழனை அந்த ஆண்டவன் தான் காப்பத்தனும்.
டேய் கொலைகார பாவி . நீ இந்தியமண்ணில் கால் பாதிக்காதே . சும்மா நாடகம் ஆடாதே மூடா .
தமிழ் மலர் பத்திரிக்கை மட்டும் ஆரியத்திற்கு அடிமை இல்லை , நாட்டில் தமிழுக்கு தொண்டு செய்வோம் என்று கூறி பத்திரிக்கையை நடத்தும் 6 பத்திரிக்கைகளும் ஆரியத்திற்கு அடிமை ,.அதோடு நம்ம தமிழர்களை சுரண்ட தலைவர்களுக்கும் , குருஜிகளுக்கும் போலி சாமியார்களுக்கும் பத்திரிகையில் செய்தியை போட்டு தமிழர்களை ஒழித்து கட்டுகிறார்கள் . நண்டு பால என்ற சிவா பாலனின் மாற்று வழி சிகிச்சை என்ற கட்டுரை வாரத்திற்கு இரண்டு முறை தினக்குரலில் வெளிவரவும் இப்போது புதிய பார்வையில் வெளிவரவும் யார் காரணம்
வேறு யாரு makkal எல்லாம் இந்த ராஜன் தான் நைனா , முன்பு ராஜனின் நம்பர் டத்தோ முருகையா அட்டை வளர்ப்பு ,காலன் வளர்ப்பு மக்கள் ஆதரவு கொடுங்கள் என்று பல கட்டுரைகள் வந்தன ,மக்கள் சுரண்டப்பட்டு நகைகள் பாசாக்கடையில் அடகு வைத்து நொடிச்சு போனதுதான் மிச்சம் ,இப்போது டத்தோ எஸ்.சரவணனின் நாம் இயக்கத்தின் செய்தியை போட்டு 1000 பேர் கலந்துகொண்டால் 3000 கலந்துக் கொண்டதாக செய்தியை போட்டு மக்களை ஏமாற்றுகிறார் . மக்களை ஓசையும் ,நண்பனும் புதிய பார்வையை மிஞ்சி விட்டார்கள் , இவர்களுக்கு தங்களின் பாக்கெட் நிறைய வேண்டும் சமூதாயம் எப்படி போனாலும் கவலை இல்லை ,சுருங்க சொன்னால் தமிழ் பத்திரிக்கைகள் எல்லாம் ஆரியர்களின் பாதம் தாங்கிகள் என்று கூறலாம் ,
எங்கோ இருக்கும் ஆரியனைப் பற்றி நாம் ரொம்பவும் கவலைப்படுகிறோம்! இப்போது நாம் எழுதுகின்ற, படிக்கின்ற தமிழ் அனைத்தும் ஆரியர்களால் உருவாக்கப்பட்டவை தான்! தமிழனில் கெட்டவனும் உண்டு. ஆரியனில் நல்லவனும் உண்டு. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தமிழனோடு வாழும் ஆரியனும் தமிழனே! நமது பார்வை சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்!
சக்கரவர்த்தி சார் நமது தமிழ் ஆரியன் தமிழ் , என்று தப்பா இலக்கணம் சொல்ல வேண்டாம். அகத்தியர் /புற நானூறு இலக்கண இலக்கியதில் இருந்துதான் சமஸ்கிரிதம் அதன் அரை குறை இலக்கணம் இன்றும் உள்ளது. தமிழின் அடிப்படை இலக்கணம் தான் ஆரியர்கள் கற்ற சமஸ்கிரிதம். அவனுக்கே விளங்காத மந்திரங்களை பாடி தமிழனை ஏமாற்றும் சமஸ்கிரிதம் முந்தியா தமிழ் மந்திரங்கள் முந்தியா என்று ஆய்வு செய்யுங்கள் புரியும். 5000 ஆண்டுகளுக்கு மேலான தமிழ் மொழியை செம்மொழி என்றும் 2500 ஆண்டுகள்தாம் என்று கருணாநிதி தெலுங்கர் சொல்வதை நம்ப வேண்டாம். லுமூரியா கண்ட தென்னக தமிழன் மூத்தவனா .வட நாட்டு ஆரியன் மூத்தவனா என்றும் ஆய்ந்து பாருங்கள்.
தமிழ் மொழிக்கு 2500ஆண்டுகள்தான் என்று கலைஞர் எப்போது சொன்னார் என்று ஆதாரபூர்வமாக இங்கே, இந்தப் பகுதியிலேயே பொன் ரங்கன் மழுப்பாமல் நேரடியாக குறிப்பிடவேண்டும். இந்தியாவிலிருந்து இங்கு வந்த நாலந்தர அரசியல்வாதிகள் பேசியதை ஆதாரமாக முன்வைக்கக்கூடாது என்பது என்னுடைய வேண்டுகோள். நாகரிகமான பதிலை எதிர்பார்க்கிறேன்.
http://subadhraspeaks.blogspot.in/2013/06/is-tamil-100000-years-old.html
தமிழன் சார்! செம்மொழி மாநாட்டில் கருணாநிதி உரையில் தப்பா குறுப்பிட்ட 2000 ஆண்டு செய்தியால் பெருத்த அவமானம் ஏற்பட்டு போனார் !இதனால் பெரிய சர்ச்சைகள் உண்டாகி போனது …பெரிய தமிழ் அறிஞர்கள் வாதங்கள் நடந்தன படிக்கவில்லையா? தமிழர் ஆண்டு இப்போது 2043 தமிழ் அறிவியல் மொழி 10,000 ஆண்டுகள் என்றால் நீங்கள் செத்துப்போகணும்.அங்கு போயாவது கண்டு பிடியுங்கள். நான் படித்த மொழி ஞர்யுரு பாவாணர் உலக மொழி ஆய்வை எழுதுகிறேன் .நீங்கள் மறுத்தால் உங்கள் ஆய்வை முன் வையுங்கள். ஆமாம் நான்காம் தர அரசியல் வாதிக்கும் இலக்கண கணக்கியளுக்கும் என்ன சம்பந்தம்? புத்திசாலியா விளக்கவும் ….மகிழ்சிக்கொள்வேன்.
Pon Rangan
about a minute ago
தமிழா? சமஸ்கிருதமா? என்று பல காலம் சண்டை போட்டு வந்த நம்மவர்களுக்கு நான் சொல்லப்போகும் இந்தச் செய்தி முறையே ஆச்சர்யமாகவோ அதிர்ச்சியாகவோ இருக்கலாம்.
இரண்டு மொழிகளிலும் ஒரே பொருளைத் தரக்கூடிய ஒரே வார்த்தைப் பிரயோகங்கள் பல இருக்கின்றன. இலக்கணம் மற்றும் எழுத்து முறைகளிலும் ஒற்றுமைகள் இருக்கின்றன. அவை தமிழுக்குச் சொந்தமா? இல்லை சமஸ்கிருதத்திற்குச் சொந்தமா? எனப் பல விவாதங்கள் நடந்துவந்த நிலையில் பன்மொழி அறிஞர் திரு. சாத்தூர் சேகரன் அவர்களின் ஆய்வு அனைவரது கருத்தையும் கவர்ந்துள்ளது. அப்படி என்ன அவர் ஆய்வு செய்துள்ளார் என்று அறிய ஆவலா? மேற்கொண்டு படியுங்கள்..
பல சுனாமிகள் தோன்றி குமரிக் கண்டத்தைச் சிறிது சிறிதாகச் சிதைத்து வந்தன. ஒவ்வொரு 10,000 ஆண்டுகளிலும் ஒரு பெரிய சுனாமி தோன்றியதாக ஆய்வறிஞர்கள் கூறி வருகின்றனர். இதனால் சில இலட்சம் மக்கள் மடிந்தனர். ஆனால், மிகச் சிறிதளவு நிலப்பகுதியே அழிந்தது.ஆனால் கடற்கோள் என்பது கி.மு.10,000 அளவில் தோன்றி கி.மு. 8,000 அளவு நீண்ட காலம் நடந்தது. இதனை மேலை நாட்டு ஆய்வாளர்கள் பெரும்பனிக்காலம் ( THE GREAT ICE-AGE ) என்கின்றனர். இதன் காரணமாகவே குமரிக் கண்டம் முற்றிலுமாகவே அழிந்தது.
முதல் பெருஞ்சுனாமி கி.மு. 60,000 ஆண்டுகளை ஒட்டி நிகழ்ந்ததாக ஆய்வறிஞர்கள் கூறினார்கள். இதற்கு அஞ்சியே குமரிக் கண்டத் தமிழர்கள் கட்டுமரங்களில் ஏறி ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆசிய கண்டங்களுக்குக் குடியேறினர். இதனால் அந்தக் கண்டத்து இன்றைய மக்களிடம் திரியாத தமிழ்ச் சொற்களும், திரிந்த தமிழ்ச் சொற்களும் பற்பல இலக்கணக் கூறுகளும் இன்றும் அழியாத நிலையில் உள்ளன.
ஆஸ்திரேலியப் பழங்குடிகள்
நீ…நீங்கள் என்பதை, நீ, நிங்க என்கின்றனர். நான், நாம் ( நாங்கள் ) என்பதை நா, நாங்க என்கின்றனர். கண் ஐம்புலன்களில் சிறந்த தலையாய புலன் என்பதால், அதனை புலன் என்கின்றனர்.
என் கண் – நா புலன், உன் கண் – நின் புலன், அவன் கண் – அவன் புலன் என்கின்றனர். பிரதி பெயர்கள் நாடு விட்டு நாடு போகாது. மேலும் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் கடந்த 50,000 – 30,000 ஆண்டுகளை ஒட்டியோ அல்லது அதன் பின்னரோ தமிழகத்துடன் தொடர்பு இல்லை.
ஆப்பிரிக்கப் பழங்குடிகள்
எள் + நெய் என்பதுதான் எண்ணேய் ஆயிற்று. எனவே OIL என்ற சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல் நெய் என்பதே ஆகும். தமிழகத்தில் நெய் என்ற சொல் பசுவின் நெய் என்றாகிறது. ஆனால், ஆப்பிரிக்காவின் வழக்கு மொழிகளில் நெய் என்பதே ஆயில். உண் என்ர வினைச் சொல் எகிப்து மொழியில் 4000 ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது.
தென் அமெரிக்கத் தமிழர்
அன்னை என்ற அருமையான அற்புதத் தமிழ்ச் சொல், தென் அமெரிக்காவில் ஒரு மொழியான இன்கா மொழியில் உள்ளது. சரி என்று நாம் கூறுவதைம் அவர்கள் கரி ( ச = க ) என்கின்றனர். நம் பயிர் பச்சைகளுக்குக் கடவுளாகப் பச்சை அம்மன் என்று நாம் கூறுவதைப் போல், அவர்களும் தம் பயிர்க் கடவுளாகப் பச்சை அம்மன் என்றே வைத்துள்ளனர். 60,000 – 50,000 ஆண்டுகளாக நமக்கும் தென் அமெரிக்காவின் பல குடி மக்களுக்கும் தொடர்பு எதுவும் இருந்ததில்லை.
எனவே 60,000 ஆண்டுகளுக்கு மு8ன்னரே தமிழ் செம்மையான செம்மொழியாக இருந்தது என்றால் தமிழின் வயது ( 1,00,000 ) ஓர் இலட்சம் ஆண்டுகள் என்று கணிக்கலாம். வெறும் சொல் ஆராய்ச்சிச் சான்றுகள் மட்டுமில்லை; கரி, அணு ஆய்வுகளும் ஆண்டுக் கணக்கை உறுதி செய்கின்றன.
=====
எம்மொழியும் எம் மொழி : உலக மொழியறிஞர் சாத்தூர் சேகரனின் ‘அகில மொழி’ யின் அற்புதங்கள். உலக அறிஞர்கள் பார்வையில் “பன்மொழி அறிஞர்” சாத்தூர் சேகரன் பற்றி இப்படித்தான் பேசி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்:
“தமிழைப் பற்றி இது காறும் இத்தனை விரிவாக ஐரோப்பாவில் கூறிடவில்லை. எனவே சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் தாய் என்ற ஐரோப்பியரின் கருத்து இன்றளவும் மாறவில்லை. உங்கள் உரையாற்றல் எங்களுக்கு அதிர்ச்சியைத் தந்த போதிலும் தமிழே உலக மொழிகளின் தாய் என்ற கருத்தை நம்பத்தூண்டுகிறது”
-சமஸ்கிருதத்துறை தலைவர், லண்டன் பல்கலைக்கழகம், லண்டன்.
“நாங்கள் நினைத்தே பார்க்கவில்லை. ஹிப்ரு மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உறவு உண்டு என்று. உங்கள் உரையால் பல புதிய உண்மைகளை உலகிற்கு அறிவித்திருக்கிறீர்கள்”
– நூலகர், ஹிப்ரு பல்கலைக்கழகம், ஜெருசேலம், இஸ்ரேல்.
“பிரமிட் கட்டியவர்களான எங்கள் முன்னோர்கள் தமிழர்களா? தமிழர்கள்தான் உலக முழுவதும் பரவி இருந்தார்களா? வியப்பிறகுரிய செய்திகளைச் சொல்கிறீர்கள்”
– கெய்ரோ அருங்காட்சியகம், கெய்ரோ, எகிப்து.
“தமிழ் மொழியின் நீள அகலம் பற்றி உலகம் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். உண்மையை வெளிக்கொணர நீங்கள் ஆற்றும் பணி அருமையானது. உங்களோடு இணைந்து பணியாற்ற நான் பெருமிதம் கொள்கிறேன்”
– டாக்டர் ஹக்பாக்ஸ், மெக்சிக்கன் பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்கா.
“இந்திய மொழிகளை மட்டுமல்ல உலக மொழிகளை எல்லாம் அறிந்திருப்பதுடன் அவற்றின் வேர்ச்சொற்களை எல்லாம் கடகடவென கூறுவதை வியக்கிறேன். நான் சீனமொழி அறிந்தவன். ஆனால் நீங்கள் சீனமொழி தமிழ் மொழி உறவு கூறியதைக் கேட்டு மலைத்து நிற்கிறேன்”
– டாக்டர் அருணபாரதி, பெனாரஸ் பல்கலைக்கழகம், காசி.
இவர்களைப் போல இன்னும் பல்வேறு நாட்டு அறிஞர்கள் நம் தமிழரை அதுவும் ஒரு தமிழ்மொழி அறிஞரை புகழாரம் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். “சங்கம் வைத்து தமிழ் வளர்த்த” மதுரையில் அகிலமொழி பயிலரங்கத்திற்கு பிரதிமாதம் வந்திருந்து தமிழ் மொழியின் தொன்மை பற்றியும், அதன் இலக்கணங்களையும், ஆதாரங்களுடன் தமிழ்ச் சொற்கள் அதிக மாற்றமின்றி எப்படி பிறமொழி சொற்களாகின்றன என்றும்… தமிழே உலகமொழிகளின் தாய்மொழி என்பதற்கும் பல்வேறு உதாரணங்களை அந்த 72 வயது இளைஞர் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் பொங்கு தமிழாக கீழ்க்கண்டவாறு மேற்கொள்காட்டி எடுத்துரைக்கிறார்.
களி (மண்) – Clay. பிறப்பு – Birth. பொறு – Bear. நாடுதல் – நாடு (ஜெர்மன்). கண் – கண் (சீனா). உப்பர் – ஊப்பர் (இந்தி).
தமிழ் சொற்களில் நடு எழுத்து மறைந்து உருவான சொற்கள்:
நாமம் – நாம் (இந்தி). தாழ்வு – தாவு (தெலுங்கு).
தமிழ் எதிர்மறை முன் ஒட்டுக்களுடன் புதிய சொற்கள்
இம் – Immoral. இல் – Illegal. நிர் – Nil. அன் – Unused. அவ/அப – Abuse.
தமிழ் சொற்களின் முன் எழுத்து விலகி புதிய சொற்கள் உருவாகின்றன.
பதின் – Ten. உருண்டை – Round. உருளை – Roll. அம்மா – மா (இந்தி). நிறங்கள் – றங் (இந்தி). உராய் – Rub. அரிசி – Rice
காரணப் பெயராகிய புதிய சொற்கள்:
தேங்குதல் – Tank. ஈனுதல் – Earn என்றும்
திசை எட்டும் என்ற தலைப்பின் வாயிலாக தமிழ்மொழி பயன்பாடு தமிழரின் நாகரீகம் பற்றியும் குறிப்பிடுகிறார்.
* சித்திரை முதல் நாள் வருடப்பிறப்பாக இஸ்ரேல்-லில் கொண்டாடப்படுகிறது.
* உணவில் வாசனைப் பொருட்களை அரேபியர்கள் பயன்படுத்துகிறார்கள்.
* பச்சை அம்மன் வழிபாடு என்ற பெயரில் தென் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது.
* பல்லாங்குழி விளையாட்டு இன்றும் ஆப்பிரிக்காவில் நடைமுறையில் உள்ளது.
* தமிழகத்தில் நாம் கொண்டாடும் பொங்கல் தினத்தில் அதே நேரம் “ஹொங்கரோ ஹொங்கர்” என ஜப்பானி-ல் சூரியனை வணங்கி குரலிட்டு கொண்டாடுகிறார்கள்.
* கண்-கண் காண் – காண் காண மகேந்திர + வர்ம + பல்லவர் போல மா+சே+துங் சீனாவில் பேசப்படுகிறது.
* சேவல் சண்டை, திருமண சீர் வரிசை, மஞ்சள் துணி பயன்பாடு தாய்லாந்து-ல் இன்னும் இருக்கிறது.
ஆற்று மீன் என்பதை நறு நீரு மீன் என்று ஆஸ்திரேலியா பழங்குடியின மொழியில் பேசப்படுகிறது.
* மேலும் தமிழ் சொற்களின் முன் S என்ற எழுத்து சேர்ந்து ஆங்கில சொற்கள் எப்படி உருவாகின்றன.
S பேச்சு – Speech. S மெது – Smooth. S உடன் – Sudden. S நாகம் – Snake
* தமிழ் சொற்களின் முன் எழுத்துக்கள் மாறி உருவான சொற்கள்
எட்டு – ஆட் (இந்தி) பத்து – ஹத்து (கன்னடம்) கடை – கெடா (மலாய்) பூங்கொத்து – கொத் (ஜெர்மன்)
* இலக்கிய வழக்காக மலையைக் கல் என்பர். வடபெருங்கல் என்பது இமயமலையைக் குறிக்கிறது.
கல்லூர், குண்டுக்கல், கர்நாடகம்
(கல்அறை) கல்லறா – கேரளம்
கல்லூர் – ஆந்திரம்
கல்முனை – இலங்கை
கல்லினா பாட் – ரஷ்யா
* மலை என்ற தண்டமிழ்ச் சொல்லை மலைய, மலய, மாலயா என்று வட இந்திய மொழிகள் திரித்துப் பயன்படுத்துகின்றன. இமயமலை – ஹிமாலயா என்று மலையா (ஒருநாடு) மலேயா என்றும்
* மலை / மலா ஆகி லாம என மாறுகிறது. பிறழ் விதிப்படி ய ர ல ள ழ போன்ற (LIQUID) இடையினம் தம்முள் மாறிக் கொள்வதால் லகரம் இங்கு யகரமாகிறது.
* மன் என்பதிலிருந்துதான் மனு, மனிதன், மனுசன் போன்று பல சொற்கள் உண்டாகின. பல மக்கட் பெயர்களும் கிடைத்தன.
ஹிப்ரு மொழி
மனுஏல் – மனுவேல்
தமிழ்ப் பெயர்
கருமன் / கருத்திருமன்
தருமன் / திருமன்
வட இந்தியப் பெயர்
பீமன் இராமன்
இவ்வாறு உலக ஊர்ப் பெயர்களாக ஐந்து லட்சம் பெயர்களை ஆராய்ந்ததில் யாவும் தமிழாகவே உள்ளன.
உலக மக்கட் பெயர்களாக லட்சம் பெயர்களை எடுத்து ஆராய்ந்ந்து பார்த்ததில் யாவும் தமிழாகவே உள்ளன.
இதைப் போலவே இன்னும் தமிழ்மொழியில் அம்மா அப்பா என்ற நாவில் தவழும் சொல் உலகில் 200 மொழிகளுக்கும் மேல் பயன்படுத்தப்படுகிறது என்று தமிழ் தன் சிந்தனையைச் சிறகுகளாக இன்னும் விரித்துக் கொள்வதுபோல எடுத்துக் கூறுகிறார்.
திரு Pon Rangan கூறுவது உண்மை! ஆராய்ந்து பாருங்கள்!
தமிழ்மொழி செம்மொழி என்பதிலோ அல்லது தமிழ்மொழி மிகவும் தொண்மையான மொழி என்பதிலோ எவ்வித ஐயப்பாடும் எனக்கில்லை. பொன் ரங்கன் குறிப்பிடும் தமிழறிஞர்களின் பனுவல்களை அடியேனும் படித்திருக்கிறேன். குறிப்பாக , சாத்தூர் சேகரன் அவர்களை, அவரைப் பெரும்பாலோர் அறிஞர் என்று அறியா முன்னமேயே அவரை சந்தித்தும் உரையாடியும் இருக்கிறேன். தமிழ்மொழி செம்மொழி என்பதை நிலைநிறுத்த அழகான விளக்கத்தை இங்கே பகிர்ந்தீர்கள். அங்வாறே… கலைஞரின் செம்மொழி மாநாட்டின் உரையையும் காட்டி, தமிழ்மொழி இரண்டாயிரம் ஆண்டுகள் மட்டுமே பழைமையானது என்று கலைஞர் குறிப்பிட்டதாக நீங்கள் குறிப்பிட்ட இடத்தையும் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். அதை நீங்கள்தான் செய்யவேண்டும். நயமாக எழுதுங்கள் என்று சொல்லியும் “நீங்கள் செத்துப் போகணும்” என்று அருவருக்கும்படியாக எழுதுகிறீர். பொன் ரங்கன்… நீங்கள் உண்மையான தமிழரின் பண்போடு கருத்துப் பகிர்வு நடத்துவதாக இருப்பின் தங்களோடு கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள ஆர்வம் கொள்வேன். இல்லை, முடியாது, நான் இப்படித்தான் என்றால் , உங்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என விலகிச் செல்வேன். மற்றும் ஒன்று, ” நான்காம் தர அரசியல்வாதி” என்று குறிப்பிட காரணம் தமிழகத்திலிருந்து இங்கு வந்து இன ஒற்றுமையைக் கற்றுக்கொடுக்க முற்படும் இலக்கியவாதி+அரசியல்வாதி= வேடதாரி என்பவர்களின் தன்னல வாதத்தினை முன்வைக்க வேண்டாம் எனும் நோக்கத்தில்தான். ஏனென்றால் கலைஞரை அரசியல் ரீதியாக கருவறுக்கத் துடிப்பவர்கள் அவர் எதைச் செய்தாலும் அதில் குறைகாணும் நோக்கில் உள்ள மனநோயாளியாக , இங்கே கடைவிரிக்க வருவதை மனதில் கொண்டே அவ்வாறு பதிவு செய்தேன். உலகத்தில் குறைகளற்ற மனிதர்கள் எவருமே இலர்.கலைஞரும் குறைபாடுகள் உள்ள மனிதரே. அதற்காக ஒரு மனிதனை வீழ்த்த அறையெடுத்து ஆய்வுசெய்யும் அறிவிலியாக இருப்பது அருவருப்பென கருதுபவன் நான்.
தமிழா? சமஸ்கிருதமா? என்பதைப் பற்றியெல்லாம் பேசி, படித்து, மூட்டைக்கட்டி நீண்ட நாளாகிவிட்டன. இப்போது சமஸ்கிருததிற்குப் பதில் ஆங்கிலம் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது! தமிழ்நாட்டுத் தமிழனுக்கு தண்ணீர் என்றால் வேறு அர்த்தம், வாட்டர் என்றால் அது தான் தமிழ் என்கிறான்! இதையெல்லாம் பேசு புண்ணியமில்லை. நம்மால் என்ன முடியுமோ அதை மட்டும் செய்வோம். நான் சொல்ல வந்ததெல்லாம் இன்று நாம் எழுதுகின்ற தமிழுக்குப் பாதைப் போட்டவர்களில் கலைஞரும் ஒருவர். இன்று நாம் வார்த்தைகளைச் சுருக்கி எழுதுகின்ற முறையைக் கொண்டு வந்தவர் பெரியார்-எம்.ஜி.ஆர் கூட்டு! உங்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால் இவர்களில் யாரும் தமிழர்கள் இல்லை! அதனால் என்னா தமிழ் கெட்டா போகிவிட்டது? பொன் ரங்கன் சார்! நீங்கள் அரசியலையே பாருங்கள்! அது தான் நல்லது!
தமிழ் செம்மொழி ஆகியது இந்த க…ஒரு தரம் தமிழ் நாடு சென்று பாருங்கள் அங்கு தமிழ் படும் பாட்டை…எல்லாமே தமிங்க்லிஷ் …
தமிழன் ,
உங்கள் கருத்து நன்றே !
தமிழ் …, செம்மொழி பற்றிய ஆய்வுகள் கலைஞ்சர் ஒருவர்
மேற்கொண்டு முடிவெடுத்தது அன்று .
இவை பற்றிய கூட்ட நடப்புகள் நிகழ்த்திய அறிஞ்சர் பெருமக்கள்
பலர் இன்று இல்லை .
இது பற்றிய பல உண்மைகள் நாடு நிலை தவறா அறிஞ்சர்
பெருமக்கள் அறிவர் .
கலைஞ்சரை …மூதரிஞ்சரை …அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு
விமர்சிப்பது , இங்கே அசிங்கம் !
அப்படி பேசுவோர் இன்னும் உலகம் அறியா கீழ் மக்களாகவே
நான் கொள்வேன் .
உலகம் இன்று எங்கோ போய்க் கொண்டிருக்கிறது .
மெல்லத் தமிழ் இனி சாகும் என்று , எப்படி இவ்வாதம் தோன்றியதோ
அது போல் … இன்று நாமெல்லாம் தமிழுக்கு தமிழ் நாடென்று
எண்ணுவதும் பேசுவதும் கூட தவறாகிப் போகும் நிலையில்
இன்றைய தமிழகம் உரு மாறிக்கொண்டிருக்கிறது !!!
இதை அவர்கள் யாரும் உணருவதாகவோ …,அதைப் பற்றி
வருந்துவதாகவோ… காணோம் !
அவர்கள் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசும் புதிய
சமுதாயமாகவே மாறிவருகின்றனர் .
தொலைகாட்சியை திறந்தால் இது என்ன புதிய மொழி என்று
கேட்க்கும் அளவுக்கு மொழித் துரோகிகள் பெருகிக்கொண்டே இருக்கிறார்கள் …,வெட்கமில்லை …,வெட்கமில்லை…!
இதையே சீனர்கள் நடத்தும் சி சி டி வீயில் பாருங்கள் …
சீன மொழியில் நடத்தும் நிகழ்ச்சியில் , அம்மொழி தவிர
வேற்று மொழி ,ஒரு வார்த்தை கூட அவர்களில் எவரும் பேசமாட்டார்கள் .
இந்த உறுதி தமிழனிடம் இல்லை !
மற்றது உலகமெல்லாம் தமிழ் என்பதும் கோடிக்கணக்கான
ஆண்டுகள் பழமை என் பதும் …நமக்குள்ளே பழம் பெருமை
பேசுவதன்றி வேறு இல்லை !
எழுதி வைப்போர் எழுதட்டும் .இன்றய நடைமுறை என்ன ?
நமக்கு விளையும் நன்மை என்ன?
பழம் பெருமை இன்றைய நம் பிரச்னைகளுக்கு என்ன
தீர்வை கொண்டுவரப்போகிறது ?
தமிழ் செத்துக்கொண்டிருக்கிறது …,தமிழ் நாட்டிலும் …நாம்
வாழும் நாட்டிலும் .!!!
மொழிக்கு மதிப்பில்லை …, நம் நாட்டில் எவ்வளவு கேட்டாலும்
அதை ஏற்கும் மனம் இல்லை!
தேர்தல் பதாகைகளில் …தேர்தல் சமயங்களில் நல்ல தமிழும்
கொச்சை தமிழும் புகுந்து விளையாடும் !
முதலில் இதற்கு யாராவது அதிகாரத்தில் உள்ளவர்கள் தீர்வு
காணட்டும் .
பொதுவில் எழுதுவோர் அசிங்கங்களை பதிவு செய்வதை
விடுத்து மேன் மக்களாக வளருவதே …எழுதுவதே நலம் .