நடிகர் சல்மான் கானுக்கு பத்தாண்டு சிறை? அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்

salman_khan_001பிரபல இந்தி நடிகரான சல்மான் கான் விரைவில் சிறைக்கு செல்வதற்கான சூழ்நிலைகள் உருவாகிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சல்மான் கான், கடந்த 2002ம் ஆண்டு மது அருந்திவிட்டு கார் ஓட்டியதில் சாலை ஓரத்தில் படுத்திருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும், 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இதையடுத்து நடந்த வழக்கு விசாரணையில், அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவகர்களே சல்மான் கானுக்கு எதிராக சாட்சி சொன்னதால், விசாரணை அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.

இந்நிலையில், சல்மான்கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகிவுள்ளது.

இந்த வழக்கில் இருந்து தப்பித்துவிட வேண்டும் என்று தான் எடுத்து வந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததால் சல்மான் கான் அதிர்ச்சியில் உள்ளார்.

அதேபோல் அவரை வைத்து தற்போது நோ என்ட்ரி, மெயின் என்ட்ரி உள்பட இரண்டு படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், சல்மான்கான் உடனடியாக சிறைக்கு சென்று விட்டால், இந்த படங்களின் முதலீடான ரூ. 500 கோடி ரூபாய் நஷ்டமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.