பிரதமர் பதவியேற்கும் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்திருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கண்டித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறுகையில், “ராஜபக்சேவை பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்திருப்பதை சிபிஐ கடுமையாகக் கண்டிக்கிறது, இது தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதோடு, தமிழர்களின் உணர்வுகள் மதிக்கப்படுவதில்லை என்பதையும் காட்டுகிறது.
இலங்கையில் தமிழர்களின் நிலை என்ன என்பதை பாஜக நன்றாகவே அறியும், சர்வதேச நாடுகள் போரில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு பாரபட்சமற்ற விசாரணையைக் கோரி வருகிறது. இந்த நிலையில் ராஜபக்சேவை அழைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
அயலுறவுக் கொள்கைகளைப் பொறுத்தவரை பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே எந்த வித வேறுபாடும் இல்லை, குறிப்பாக இலங்கை விவகாரத்தில். ஆனால் தமிழ்நாட்டிலோ வைகோ, விஜய்காந்த், ராமதாஸ் தலைமைக் கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மோடி பிரதமரானால் இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படும் என்று பிரச்சாரம் மேற்கொண்டனர் என்றார்.
எல்லா ஊர்களிலும் தமிழனை பகடை காய்களாக பாவிக்ரங்கள் மோடி என்ன தமிழரா ????????????????????