தமிழக கட்சிகள் மீது அதிருப்தியை வெளிபடுத்திய மோடி: ராஜபக்சே அழைப்பு விவகாரம்

modi1நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு விடுத்துள்ள அழைப்பை எதிர்க்கும் தமிழக கட்சிகளின் மேல் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தனிபெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளதால் வருகிற 26ம் திகதி நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்கிறார்.

இவ்விழாவில் பங்கேற்க சார்க் அமைப்பில் இடம் பெற்றுள்ள 7 நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனை ஏற்றுக்கொண்ட அவர் மோடி பிரதமராக பங்கேற்கும் விழாவில் கலந்துகொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

நரேந்திர மோடி, ராஜபக்சேவின் இந்திய வருகை தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசியல் கட்சிகள் மீது தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தனது ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள மோடி, மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக நிர்வகிப்பது, தாங்கள் அல்ல, மத்திய அரசுதான் என்பது தெரியாமல் இலங்கை அதிபருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை தமிழ்நாட்டின் கட்சிகள் எதிர்க்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

TAGS: