மோடி பதவியேற்பில் பங்கேற்க எதிர்ப்பு : ரஜினிகாந்த் வீடு முன் ஆர்ப்பாட்டம்

11-rajini11-300இந்தியாவின் 14ஆவது பிரதமராக நாளை மோடி பதவி ஏற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்‌ஷ கலந்து கொள்ளவுள்ளார். இதற்காக அவர் இன்று தனி விமானம் மூலம் டெல்லி வருகிறார். நாளை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

ஈவு இரக்கமின்றி தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்‌ஷ இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. ரயில் மறியல் போராட்டங்களும் நடந்து வருகிறது.

ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, ராமதாஸ், சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பழ.நெடுமாறன், இயக்குநர் பாரதிராஜா உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ராஜபக்‌ஷவை அழைத்ததால் தமிழகத்தில் இருந்து யாரும் மோடி பதவி ஏற்பு விழாவிற்கு செல்லக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னையில் உள்ள ரஜினிகாந்த் வீடு முன் மாணவர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, நரேந்திரமோடி ரஜினி வீட்டிற்கே சென்று அவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இருவரும் நீண்ட கால நண்பர்கள். மோடி பதவி ஏற்பு விழாவிற்கும் மோடியிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் ரஜினிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நரேந்திர மோடி பதவியேற்பு விழா: ரஜினிகாந்த் வீடு முற்றுகை

ராஜபக்சே கலந்துகொள்ளும் விழாவுக்கு (நரேந்திர மோடி பதவியேற்பு விழா) நடிகர் ரஜினிகாந்த் செல்லக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து அவரது ஈழத்தமிழர் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி, இந்தியாவின் பிரதமராக பதவியேற்கும் விழா தலைநகர் டெல்லியில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

இந்த விழாவில், இலங்கை அதிபர் ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். மேலும், நடிகர் ரஜினிகாந்த் உள்பட ஏராளமான திரையுலக பிரமுகத்தினருக்கும், அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இலங்கை அதிபர் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து ஈழத்தமிழர் ஆதரவாளர்கள், தமிழீழ மாணவர் கூட்டமைப்பு உள்பட ஏராளமான இயக்கங்கள் சார்பில் தொடர்ந்து கண்டன போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் தமிழகத்தில் நடந்து வருகிறது.

ராஜபக்சே கலந்துகொள்ளும் விழாவுக்கு (நரேந்திர மோடி பதவியேற்பு விழா) நடிகர் ரஜினிகாந்த் செல்லக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து, சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ரஜினிகாந்த் வீட்டினை முற்றுகையிடப்போவதாக பாலச்சந்தர் மாணவர் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது, இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதை தொடர்ந்து கோஷமிட்டபடியும், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் பொலிசார் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அனைவரையும் கைது செய்தனர்.

மோடி பதவியேற்பு விழாவை புறக்கணித்த ரஜினிகாந்த்

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளப்போவதில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் நிலையை அடைந்தது.

இதனையடுத்து பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி, இந்தியாவின் பிரதமராக பதவியேற்கும் விழா தலைநகர் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

இந்த விழாவில், இலங்கை அதிபர் ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். மேலும், நடிகர் ரஜினிகாந்த் உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ராஜபக்சே கலந்துகொள்ளும் விழாவில் ரஜினி பங்கேற்க கூடாது என்று ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து மோடி பதவியேற்பு விழாவில், நடிகர் ரஜினி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அந்நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

TAGS: