நாடு முழுவதும் உயர்தர மருத்துவனைகள்:முதல்வர்களுடன் மத்திய அமைச்சர் திட்டம்

harsa vardanபுதுடில்லி:நாடு முழுவதிலும் எய்ம்ஸ் மருத்துவமனை மாதிரி போன்ற உயர் சிறப்பு மருத்துவமனைகளை அமைக்கவும் ஏழைகளுக்கு சுகாதார பாதுகாப்பு கிடைக்கவும் அதற்கு தீர்வு காண நாங்கள் அதற்கான பணிகளை துவங்க தயாராகி, மாநில முதல்வர்களின் ஒத்துழைப்பு பெற உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

இது குறித்து டில்லியில் நேற்று பேசுகையில்,முதல் கட்டமாக போபால், புவனேஸ்வரம், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர், ரிஷிகேஷ் ஆகிய 6 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு பகுதி அளவில் செயல்பட்டு வருகின்றன. தரமான இளநிலை, முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு கல்வியும் அளிக்கப்படுகின்றன.

மாநில முதல்வர்கள் விரும்பினால் அந்தந்த மாநிலங்களிலும் உயர் சிறப்பு மருத்துவமனைகள் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்படும்.மேற்கு வங்க மாநிலம் ராய்கஞ்சில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க சென்ற ஆண்டு திட்டமிடப்பட்டது. ஆனால், மருத்துமனைக்கு தேவையான இடத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

தொடர்ந்து, சிலிகுரி அல்லது கூச்பிகார் நகரத்தில் அமைக்க வேண்டும் என்று அம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ள ஆலோசனை பரிசீலிக்கப்படும்.

பொது நலனுக்காகக் கட்டுப்படும் மருத்துவமனைத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் தடையாக இருக்கக்கூடாது. உலக சுகாதார நிறுவனம், மக்கள் தொகையில் 1,100 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதாசாரத்தை வரையறுத்துள்ளது. தற்போதுள்ள நிலையில் இந்தியாவில் 1,800 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதாசாரம் என்ற நிலை இருக்கிறது.

கிராமப்புறங்களில் மருத்துவர்கள் சேவையாற்ற தயக்கம் காட்டுகின்றனர். கிராமங்கள், நகரங்களில் உள்ள மருத்துவர்கள் வேலைவாய்ப்புக் காரணமாக பெரிய நகரங்களை நோக்கி பயணிக்கிறார்கள். இந் நிலையில், எய்ம்ஸ் போன்ற அதிநவீன மருத்துவமனைகள் மாவட்ட தலைநகரங்களில் உருவாக்குவது அவசியமே என்கிறார் சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.

TAGS: