வெளியுறவுக் கொள்கையை வைத்து இந்திய எல்லைகளை மீட்பாரா புதிய பிரதமர்?

narendra_modiபுதுடில்லி : இந்தியா கிட்டதட்ட தனது எல்லைப்புற பாதுகாப்பை இழந்துள்ள நிலையிலேயே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வெளியுறவுக் கொள்கைகள் எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளை முடக்கி வைத்து விட்டது. 2005ம் ஆண்டு அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணுஆயத ஒப்பந்த உடன்படிக்கைக்கு பிறகு, இந்தியா மற்ற நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களால் ஏராளமானற்றை இழந்துள்ளது. சமீபத்திய தேர்தலில் மோடியை முன்னிறுத்தி பா.ஜ., பெற்ற அமோக வெற்றி, நாட்டை நல்லதொரு பாதையில் அவர் வழிநடத்திச் செல்வார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

மோடியின் பணிகள் எப்போதும் இரண்டு பாகங்களைக் கொண்டதாக இருக்கும்.அவரது அரசின் உடனடி முக்கியத்துவம், அண்டை நாடுகள் குறிப்பாக வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுடனான நட்புறவை மேம்படுத்துவதாகும். தாக்காவை பொறுத்தவரை ஷேக் ஹசீனா இந்தியாவுடன் நட்பு வைத்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். இந்தியாவிற்கு அளித்த வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்றி வரும் ஹசீனா, உள்நாட்டில் ஏற்படும் பிரச்னைகளை தளர்த்தெறிந்து, இருநாடுகளின் உறவுகளை வளர்க்க நினைப்பவர்.

அதே சமயம் இலங்கை மற்றும் பாகிஸ்தானுடனான உறவு என்பது மிகவும் சிக்கலான விஷயமாகும். இலங்கை விஷயத்தில், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இந்தியாவின் உறவு பலவீனமாக உள்ளது. இதன் காரணமாகவே அந்த நாடு இந்தியா மீது ஒரு விரோத போக்கினையே கொண்டுள்ளது. இலங்கை உடனான பொருளாதார மற்றம் அரசியல் உறவை சரிசெய்வது மோடிக்கு பெரிய காரியமல்ல. இலங்கை அரசும் தனது நிலையில் இருந்து இறங்கி வரும் என்றே எதிர்பார்க்கலாம். இலங்கையை சரிசெய்து விட்டால், தமிழக மற்றும் மேற்குவங்க மாநில கட்சிகளின் நெருக்கடியில் இருந்து மோடிக்கு விடுதலை கிடைக்கும்.

பாகிஸ்தானின் விவகாரம் வேறு விதமானது. அது எப்போதும் புதிது புதிதாக பிரச்னைகளை கிளப்பி வரும் நாடு. இந்தியா பாகிஸ்தானால் எதிர்கொள்ளும் பிரச்னையும், இஸ்லாமாபாத் எதிர்கொள்ளும் பிரச்னையும் கிட்டதட்ட ஒன்று என்றே கூறலாம். காஷ்மீரை பாகிஸ்தானுக்கே தந்து விட வேண்டும் என்று மட்டும் தான் பாகிஸ்தான் நினைக்கிறதே தவிர, இந்தியாவுடன் நல்லுறவை ஏற்படுத்த எவ்வித முயற்சியிலும் பாகிஸ்தான் இறங்கவில்லை. இருப்பினும் இந்தியாவிடம் இருந்து சில சலுகைகளையும், உதவிகளையும் பெறுவதற்காக இந்தியாவுடனான உறவை பாகிஸ்தான் நாடுகிறது. பாகிஸ்தான் மேற்கு பகுதியில் முகாமிட்டுள்ள ஆப்கானிஸ்தானின் நேட்டோ படைகளை வெளியேற்றுவதற்கு, இந்தியாவின் உதவியுடன் இஸ்லாமாபாத்தை பலப்படுத்த பாகிஸ்தான் நினைக்கிறது.காபூலில் அதிபராக உள்ள அப்துல்லா அப்துல்லா இந்தியாவுடன் நல்லுறவை கொண்டுள்ளதால், இந்தியாவுடன் நேசக்கரம் நீட்டி அதன் மூலம் பாகிஸ்தான் இருந்து நேட்டோ படைகளை வெளியேற்ற பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

இத்தகைய அண்டைய நாடுகளுடனான உறவை பேணுவதில் கூடுதல் பொறுப்பு உள்ளதால், பிரதமர் நேரடி சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

இந்தியாவிற்கு பெரிய பிரச்னையாக இருப்பது கிழக்கு பகுதி தான். சீனாவுடன் ஒத்த கருத்தை இந்தியா ஏற்படுத்திக் கொள்ளாததே இதற்கு காரணம். சீனாவுடன் சுமூகமான போக்கை ஏற்படுத்திக் கொண்டாலும், பொருளாதார உறவை பலப்படுத்த நினைத்தாலும் சீன ராணுவத்தின் எல்லை தாண்டிய ஊடுவல் தொடர்ந்து கொண்டே வருகிறது. எல்லை பிரச்னையில் ஆசிய கொள்கையையே மாற்ற சீனா நினைப்பதால் இந்தியாவின் முடிவுக்காக சீனா காத்திருக்கப் போவதில்லை. இத்தகைய சூழ்நிலையில் ஏதாவது செய்தாக வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது.

சீனாவை சமாளிக்க மோடி விரைவான நடவடிக்கையையும், வியட்நாம் மற்றும் ஜப்பான் நாடுகளுடன் நல்லதொரு அரசியல்-ராணுவ உடன்படிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்விரு நாடுகளும் இந்தியாவுடன் நல்லுறவை விரும்புவதால், மோடி அந்த நாடுகளுக்கு தனது ஆரம்ப கால ஆட்சியிலேயே சென்று உறவை பலப்படுத்தும் நடவடிக்கையையும், நெருக்கமான நட்பை ஏற்படுத்தும் முயற்சியையும் செய்ய வேண்டும். மேலும், இந்த உறவால் ஏற்படும் விளைவுகள் மற்றும் மாற்றங்களை மோடி நேரடியாகவோ அல்லது பிரதமர் அலுவலகம் மூலமோ தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

சீனாவுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வது எல்லையை பாதுகாப்பதற்கு மட்டுமின்றி, இந்தியாவின் வளர்ச்சிக்கும் அது வழிவகுக்கும். சீனாவுடன எல்லை பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல் இருப்பது அந்நாடுடனான உறவை தொடர்வதற்கு ஏற்றக் கொள்ள முடியாததாக உள்ளது. ஆனால் சீனா தெற்காசிய நாடுகளுக்குள் இருப்பதால் இந்தியாவுடனான உறவை நல்ல முறையில் கொண்டு செல்லவே அந்த நாடு விரும்பும் என எதிர்பார்க்கலாம்.

முந்தைய காங்கிரஸ் அரசு இதற்கான நடவடிக்கைகளில் இறங்காமல் இருந்ததே இதுவரையிலான பிரச்னைகளுக்கு காரணமாக இருந்துள்ளது. சீனா இந்தியாவுடனான வர்த்தக உறவை பலப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருவதால், மோடி அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் வர்த்தக ரீதியிலான உறவு மட்டும் சீன ஊடுருவலையும், எல்லை பிரச்னையையும் தீர்த்து விடாது. இந்தியாவின் துணிவான செயல்பாடுகள் கிழக்கு ஆசிய நாடுகளை சென்றடைய கூடியதாக இருக்க வேண்டும். ஒரு முறை மட்டுமே மன்மோகன் அரசு இதனை செய்து விட்டு நிறுத்தி விட்டு, போதும் என நினைத்ததால் இந்தியாவின் ராணுவ சக்தி எல்லை தாண்டிய ஊடுருவலை சமாளிப்பதற்காக வீணடிக்கப்பட்டு விட்டது. இந்த பிரச்னையை கையில் எடுத்து மோடி அரசு விரைவாக செயல்பட்டால் அண்டை நாடுகளுடனான நல்லுறவை தொடர்வதுடன், எல்லை பிரச்னைகளுக்கு பாதுகாப்பு வீரர்களின் உயிரை காவு கொடுக்காமல் சுமூக தீர்வு காண முடியும்.

மோடி முதலில் கவனம் செலுத்த போவது சீனாவுடனான பிரச்னையையா அல்லது பாகிஸ்தான் உடனான பிரச்னையையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Click Here
TAGS: