மஹராஷ்டிர மாநிலத்தின் முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை

aaaaமோடி ராஜ்யத்தில் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டதாக பஹிலி விக்கெட் பட்லி என்னும் குறுஞ்செய்தியை ஹிந்துத் துவாவாதிகள் அப்படித் தான் குறுஞ்செய்திகளை அனுப்பி கொண்டாடி வருகின்றனர்.

மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி, சிவசேனை கட்சியின் நிறுவனத் தலை வர் பால் தாக்கரே ஆகி யோரின் இயல்புக்கு மாறாக சித்தரிக்கப்பட்ட படத்தை முகநூலில் தக வல் தொழில்நுட்ப பட்ட தாரி வாலிபரான 23 வய துள்ள மொஹ்சின் சாதிக் ஷேக் என்பவர்  பதிவு செய்ததாக (எந்தவித ஆதா ரமும் இல்லை) குற்றம் சுமத்தப்பட்டார்.

அதைத் தொடர்ந்து ஹிந்துத்துவா மத வெறியர்களால் பூனா வின் பல்வேறு பகுதி களிலும் வன்முறை வெறி யாட்டங்கள் அரங்கேற்றப் பட்டன. இந்த வன்முறை வெறியாட்டங்களில் சிவ சேனைக்கட்சி, பாஜக, ஹிந்து ராஷ்டிர சேனா உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்த வர்கள் ஈடுபட்டனர். தர்மவீர் சிதை சாம்பாஜி மகராஜ் என்ற பெயரில் தான் பதிவு செய்யப் பட்டுள்ளது (31.5.2014).

வன்முறையாளர்களால் தாக்கப்பட்டு ஷேக் உயிரி ழந்ததை அடுத்து, முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது என்கிற குறுஞ்செய்தியை இந்துத்துவாவாதிகள் 25பேர் முதலில் அலை பேசிகள்மூலமாக பரப்பி உள்ளனர் என்று பூனாவின் காவல்துறை இணை ஆணையர் சஞ்சய்குமார் கூறுகிறார்.

குறுந்தாடியுடன்  பச்சை நிற பதானி குர்தா அணிந்து தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த ஷேக்கை வழிமறித்து பூனா வுக்கு வெளியே ஹடாப்சர் பகுதியில் இருசக்கர வண் டியிலிருந்து கீழே தள்ளி விட்டு ஹாக்கி விளை யாட்டுத் தடியால் ஷேக்கின் தலையில் சரமாரியாகத் தாக்கிவிட்டு, அவர்மீது கல் எறிந்து கொலை வெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

பதற்றமான அந்த பகுதியில் 12 மணி நேரத்துக் கும் மேலாக காவல்துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஷேக் உடனிருந்த உறவி னர் ஒருவர் காயமின்றி தப்பியோடி மேலும் இருவரை அழைத்து வந்து ஷேக்கைக் காப்பாற்ற முயன்றுள்ளார். காப்பாற்ற வந்த அமீன் ஷேக்(30), இஜாஸ் யூசூப் பக்வான்(25) ஆகிய அவர்களும் தாக் கப்பட்டு காயமடைந்தனர்.

சிவாஜியின் சிலை சேதமானதாக ஏற்பட்ட வதந்தியை அடுத்து, ஹிந்து பெண் முசுலீம் ஒருவரால் பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும் வதந்தி பரவியதைத் தொடர்ந்து  வன்முறைக் கும்பல் ஒன்று சேர்ந்து பதற்றமான சூழ் நிலை ஏற்பட்டது. கொல்லப்பட்ட 24 மணி நேரத்தில், கைது செய்யப்பட்ட 13 பேரில் ஏழுபேர் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வர்களில் ஹிந்து ராஷ்டிர சேனாவின் தலைவரான தனஞ்செய் தேசாய்மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. தாக் கியவர்களின் இரு சக்கர வண்டிகளை காவல்துறை யினர் பறிமுதல் செய்துள் ளனர். வண்டிகளின் ஆவ ணங்களின்படி மற்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ள னர். பூனா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அனைவரை யும் ஜுன் 9ஆம் தேதிவரை காவலில் அடைக்க உத்தர வானது. கடந்த பத்து ஆண்டு களுக்கும் மேலாக பூனா வைச்சுற்றி உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் ராஷ்டிர சேனாவின் தலை வரான தேசாய்மீது பல் வேறு கிரிமினல்  குற்ற வழக்குகள் உள்ளன.

கல வரங்களில், வன்முறையில் ஈடுபட்டு பணம்பறிப்பது உள்ளிட்ட பல்வேறு குற் றங்களின் பின்னணியைக் கொண்டுள்ளவர்  ராஷ்டிர சேனாவின் தலைவரான தேசாய் ஆவார்.

TAGS: