சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சி.யின் வம்சாவளி பெயரனான ப.முத்துக்குமாரசுவாமிக்கு வாழ்நாள் சாதனை விருதை மலேசிய இந்து திருச்சபையும், அபூர்வாஸ் நிறுவனமும் இணைந்து வழங்கியுள்ளன.
உலக அமைதியை வேண்டி, மலேசியாவின் செலாங்கூர் நகரில் உள்ள அபூர்வாஸ் நிறுவனம் மற்றும் மலேசிய இந்து திருச்சபை சார்பில் கிள்ளான் நகர் தண்டாயுதபாணி ஆலயத்தில் அண்மையில் ஒரு ஆன்மிக வேள்வி நடத்தப்பட்டது.
இதில் தமிழகம், கேரளம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த வேத விற்பன்னர்கள் பங்கேற்று யாகத்தை சிறப்பாக நடத்தினர். இந்த நிகழ்ச்சியையொட்டி தமிழறிஞர்கள் கெüரவிக்கப்பட்டனர். இதில் வ.உ.சி.யின் பெயரன் ப.முத்துக்குமாரசுவாமிக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும், நூற்றுக்கணக்கான இலக்கிய, ஆன்மிக நூல்களை எழுதியதற்காக வாழ்நாள் சாதனை விருதையும் அபூர்வாஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் முனைவர் கோ.பரமசிவம் வழங்கினார்.
நல்ல வேளை! தாத்தாவைப் போல பேரன் அரசியலுக்கு வரவில்லை! வ.உ.சி. அவர்கள் ஜேம்ஸ் ஆலனின் ஆங்கில நூலை தமிழில் “மனம் போல் வாழ்வு” என்று அந்தக் காலத்திலேயே மொழி பெயர்த்திருக்கிறார். தமிழன் முன்னேற வேண்டும் என்னும் சிந்தனையை ஆரம்பித்து வைத்தவர் அவர். அவரின் பேரனும் அவர் வழியே நடப்பார் என நம்புவோம்!