தலித் பெண்கள் சிதைக்கப்பட்ட விவகாரம் : 42 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

up_rape_protestஉத்தர பிரதேசத்தில் இரண்டு மைனர் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதேபோல் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடப்பதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அகிலேஷ் யாதவ் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மகளிர் அமைப்பினர் புகார் கூறி வருகின்றனர்.

மைனர் பெண்கள் கற்பழிப்பு மற்றும் கொலை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நார்கோ மற்றும் உண்மை அறியும் சோதனை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.

பாலியல் குற்றங்களை தடுக்க காவல்துறை தவறியதாக தொடர்ந்து புகார்கள் கூறப்படும் நிலையில், மாநிலத்தில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளை மாற்றும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. இன்று டி.ஐ.ஜி.க்கள் உள்ளிட்ட 42 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே உ.பி. சட்டசபை 19-ம் தேதி மீண்டும் கூடுகிறது. அப்போது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்ப திட்டமிட்டுள்ளன.

TAGS: