இளம் ஹீரோக்களில் யதார்த்தமாக நடிக்கக் கூடியவர் விமல். நிஜ வாழ்க்கையில் சதாராணமாக எப்படி இருப்பாரோ அப்படியே படங்களிலும் பிரதிபலிப்பார். பன்ச் டயலாக் பத்து பேரை அடிப்பது என்றெல்லாம் தடம் மாறாமல் தன் வழி தனி வழி என்று சென்று கொண்டிருக்கிறார் விமல்.
ஆனாலும் களவாணி, வாகை சூடவா என சில படங்களில் மட்டுமே அவருக்கு பெரிய வெற்றி வசப்பட்டது. விமல் நடித்த பல படங்கள் பாக்ஸ் ஆபிசில் வெற்றியடையவில்லை. எனவே ஹீரோக்களுக்கான ரேசில் பின் தங்கியே இருந்தவருக்கு, மஞ்சப்பை படம் மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.
நேற்று வெளியான மஞ்சப்பை படத்துக்கு சென்னை உட்பட பல ஊர்களில் சூர்யா, விஜய் படங்களுக்கு நிகரான ஓப்பனிங் இருந்திருக்கிறது.
சென்னை வடழனியில் உள்ள ஒரு தியேட்டரில் கூடிய கூட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலே ஏற்பட்டிருக்கிறது. இந்த தகவல்களை எல்லாம் கேள்விப்பட்ட விமல் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறாராம்.