கருத்துக் கணிப்பை நடத்தி, வடக்கு கிழக்கை இந்தியாவின் புதிய மாநிலமாக இணைக்க வேண்டும்!- ஆங்கில ஊடகம்

sri-lanka-india-mapரஷ்யாவை யுக்ரெயின் விடயத்தில் நடந்து கொண்டதைப் போல, இந்தியா இலங்கை விடயத்தில் நடந்துக் கொள்ள வேண்டும் என்று  இலங்கையில் தடை செய்யப்பட்ட ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

யுக்ரெயினில் உள்ள ரஷ்யாவின் ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துக் கணிப்பை நடத்தி, கிரைமியா பிராந்தியத்தை ரஷ்யா தம்மோடு இணைத்துக் கொண்டது.

யுக்ரெயினில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட அரசாங்கம், ரஷ்யாவுக்கு கீழ்படியாது என்ற நிலையிலேயே ரஷ்ய ஜனாதிபதி இந்த தீர்மானத்தை மேற்கொண்டார்.

இதற்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சரும் வரவேற்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் வகையில், முதல் கட்டமாக 13ம் திருத்தச் சட்டம் அமுலாக்கப்பட வேண்டும் என்று கடந்த பல வருடங்களாக இந்தியாவில் அரசாங்கங்கள் வலியுறுத்தி வந்துள்ளன.

புதிதாக பதவி ஏற்ற பாரதீய ஜனதா கட்சியும் இந்த வலியுறுத்தலை விடுத்திருக்கிறது. ஆனால் இதனை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து தட்டிக் கழித்து வருகின்றமையானது, தாங்கள் இந்தியாவுக்கு கட்டுப்பட மாட்டோம் என்பதையே வெளிப்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில்,  இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இந்திய அரசாங்கம் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி, அந்த மக்கள் இலங்கையுடன் இருக்க விரும்புகிறார்களா? இல்லை,  இந்தியாவின் புதிய மாநிலமாக வடகிழக்கு இணைய வேண்டும் என்று கருதுகிறார்களா? என்று தீர்மானிக்க வேண்டும் என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

TAGS: