தங்களது சொத்து விவரங்களை அடுத்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய அமைச்சர்களாக நியமிக்கப்படுவற்கு முன்னதாக அமைச்சர்கள் நிர்வகித்து வந்த அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், தொழில் நிறுவனங்கள், கடன் பத்திரங்கள், கையிருப்பு ரொக்கம், நகைகள், பங்கு மற்றும் பரிவர்த்தனை குறித்த அனைத்து விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன.
மேலும் அதிகாரிகளிடம் அரசியல் பாகுபாடற்று நடந்து கொள்ளவும் அமைச்சர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு சொத்து விவரங்களை அமைச்சர்கள் உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்ய வேண்டும் என்பது அரசின் நெறிமுறையில் உள்ளது.
not only ministers have to declare their asserts but all government servants in all state ! is possible ? do it mr Modi !!