கொழும்பில் இந்திய மத்திய மற்றும் தமிழக அரசாங்கங்களுக்கு எதிராக நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு கருத்து கூற மறுத்துள்ளது.
இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.
இதன் போது ஜெயலலிதாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டதுடன், இலங்கை சீனாவையே நம்புவதாகவும், இந்தியா தேவையில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சிடம் குறித்த இந்திய ஊடகம் வினவிய போதிலும், இது தொடர்பில் இப்போதைக்கு எதனையும் கூற முடியாது என்று வெளிவிவகார பேச்சாளர் சயிட் அக்பர்தீன் தெரிவித்துள்ளார்.
எனினும் பாரதீயே ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததன் பின்னர், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடுகள் அதிகரித்துள்ளன என்ற கருத்தையும் அவர் நிராகரித்துள்ளார்.
எப்பவும் இனி எப்போதும் இந்தியாவின் நிலை – தெரியாது ,முடியாது , தொடராது , வளராது , கிடையாது தான் ! காரணம் பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கதானே !!