அனல்பறக்கும் ஆந்திரா: ஒரே நாளில் 160 பேரை விழுங்கிய வெயில்

hot_andhra_001ஆந்திராவில் வெயில் கொடுமையை தாங்க முடியாமல் ஒரே நாளில் 160 பேர் பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திரா மாநிலத்தில் கடுமையாக வெயில் கொளுத்துவதால் மக்கள் வீட்டினுள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று கிழக்கு கோதாவரியில் 34 பேரும், விஜயநகரத்தில் 16 பேரும், மேற்கு கோதாவரியில் 12 பேரும், விசாகப்பட்டினத்தில் 8 பேரும் , கிருஷ்ணா மாவட்டத்தில் 9 பேரும் மற்றும் ஸ்ரீகாகுளத்தில் 40 பேரும் உள்ளிட்ட 160 பேரும் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்.

இதில் பெரும்பாலாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் அனல்காற்று காரணமாக அதிக வியர்வை வெளியேறுவதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு நேர்ந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், ராஜஸ்தானில் இருந்து வீசும் தரைக்காற்றால் அனல் அடிப்பதாகவும், தென்மேற்கு பருவகாற்று தமிழ்நாட்டுடன் நிற்பதாலும் வெயில் அதிகமாக இருக்கிறது என கூறியுள்ளனர்.

இந்த வெயில் இன்னும் 2 நாள் நீடிக்கும் என தெரிவித்துள்ளனர்.

TAGS: