மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்

nirmala_seetharamanசென்னை, ஜூன் 14-

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் இடம்பெற்றவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனும் ஒருவர். இவர் மத்திய வர்த்தக துறை இணை மந்திரியாக உள்ளார். மத்திய மந்திரியாக பதவி ஏற்றபின் முதல்முறையாக இன்று சென்னை வந்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உப்பு மற்றும் மஞ்சள் உற்பத்தியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. அதேபோல் தக்காளி மற்றும் நெல் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு நல்ல நடவடிக்கை எடுக்கும். காவிரி நதிநீர் பிரச்சினையின் தீவிரத்தை மத்திய மந்திரி உமா பாரதி புரிந்து கொள்வார்.

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் பா.ஜனதா அக்கறை கொண்டுள்ளது. மத்திய அரசின் முயற்சியால் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

TAGS: