இலங்கைத் தீவில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக, சிங்கள இனவாத வெறி பிடித்த குழுக்கள், தாக்குதல் நடத்தி வருவது மிகவும் கவலை அளிக்கிறது. இந்த வன்முறையில் ஈடுபட்ட பொதுபலசேனா என்ற அமைப்புக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன்.
பௌத்த மதத்தின் பெயரில் செயல்படும் இந்த வன்முறைக்குழு, இலங்கைத் தீவில், பௌத்த மதத்தைத் தவிர வேறு மதங்களுக்கு இடமில்லை என்ற முழக்கத்தோடு, கடந்த ஆண்டிலேயே இஸ்லாமிய மக்கள் வாழுகின்ற பல்வேறு பகுதிகளில் தாக்குதல்களை நடத்தினர்.
இந்துக் கோவில்களைத் தாக்கித் தகர்த்ததோடு, இந்துக் கோவில் வளாகங்களில் பௌத்த விகாரைகளை சிங்கள இராணுவத்தின் பாதுகாப்போடு, புத்த மதகுருமார்கள் கட்டி வருகின்றனர். கிறித்துவத் தேவாலயங்களில் ஆராதனையோ, ஜெப வழிபாடோ நடத்த விடாமல் தாக்குதல் நடத்துகின்றனர்.
இஸ்லாமிய மக்கள் பெரும்பாலாக வாழுகின்ற இடங்களில் தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கும் பாங்கு ஒலி எழுப்பும் போதெல்லாம், அந்த அழைப்பு ஒலி எவர் காதிலும் விழாதவண்ணம், பொதுபலசேனா அமைப்பினர் ஒலிபெருக்கிகளில் பலத்த இரைச்சலோடு புத்த மதம் குறித்த ஆரவார முழக்கங்களை எழுப்புவதை வழக்கமாக்கினர். மசூதிகளையும் தாக்கினர்.
இக்கொடுமைகளை, சிங்கள இனவாத ராஜபக்ச அரசு தடுக்கவில்லை. இதன் விளைவாகத்தான், இப்போது கொழும்பு அருகில் இஸ்லாமிய மக்கள் பெருமளவில் வாழும் அளுத்கம, பேருவளை நகரங்களில் முஸ்லிம்கள் மீது சிங்கள இனவாத பௌத்த வெறிக்குழு கொடூரமான தாக்குதல் நடத்தி உள்ளது. முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் உடைமைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு உள்ளன. மூன்று இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். பலர் படுகாயமுற்று உள்ளனர்.
இலங்கைத் தீவில், மனித உரிமைகள் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன. சிங்கள மொழி, பௌத்த மதம் தவிர்த்து வேறு எந்த மதத்தின் அடையாளமும், குறிப்பாகத் தமிழ் இனத்தின் அடையாளம் அடியோடு இல்லாமல் ஆக்கப்பட, ராஜபக்ச அரசின் பின்னணியில் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகள் குறித்து எந்த விசாரணையும் நடத்த ஐ.நா. மன்றம் உள்ளிட்ட எந்த அமைப்பையும் அனுமதிக்க மாட்டோம் என்று பகிரங்கமாகவே ராஜபக்ச அமைச்சர்கள் கொக்கரிக்கின்றனர்.
எனவே, இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இதற்குப் பிறகாவது உலக நாடுகள், சிங்கள அரசின் கோர முகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
‘தாயகம்’ வைகோ
சென்னை – 8 பொதுச் செயலாளர்,
18.06.2014 மறுமலர்ச்சி தி.மு.க
நல்ல சகுனம்தான், இலங்கையில் விடுதலை புலிகளை ஒழித்து
விட்டோம் என்று கொண்டாடினார்கள்,அப்போது இந்த முஸ்லிம்கள்
கொடியை பிடித்துகொண்டு ஊர்வலத்தில் பங்கு கொண்டார்கள்,
அதை தொலைகாட்சி மூலமாக நானும் பார்த்தேன்,இதே நிலை
இவர்களுக்கு வந்தால் என்று நினைத்தேன்,இன்று நடந்து விட்டது.
சாகட்டும் துலுக்கன்கள்,இவர்களுக்கு பரிதாபபடாதிர்கள்.
மலேசிய தமிழ் முஸ்லிம்களும் சற்று சிந்திக்கவேண்டும் ! சில தமிழ் முஸ்லிம்கள் தங்களை மெலாயு என்று சொல்லி திரிவது பரவலாக காணமுடிகிறது , ஆனால் மலாய் அரசோ தமிழர்களை அனைவரையும்,( தமிழ் கிருஸ்துவர் , தமிழ் முஸ்லிம் ) கிளிங் என்றுதான் அழைக்கிறார்கள், மதத்தால் தமிழன் பிரிந்து இருப்பது வேதைனையே !
தமிழர் நந்தா அவர்களே… இன்னும் வேதனை என்ன தெரியுமா? அங்கு கிறிஸ்துவ மற்றும் ஹிந்து தமிழர்கள் கொல்லப்படும்போது இங்குள்ள இந்திய மற்றும் தமிழ் இஸ்லாமியர்களில் பெரும்பாலோர் மௌணம் காத்தனர். இன்று தமிழ் இஸ்லாமியர்கள் அங்கே தாக்கப்படுகிறார்கள் அப்போதும் ,வெளியேறி ஒர் ஆர்பாட்டம் ,எதிர்ப்புகூட காட்டும் உணர்வு தமிழ் இஸ்லாமியருக்கு இங்கு இல்லை என்பதைப் பார்க்கும்போது, தமிழன் எந்த சமயத்தைச் சார்ந்திருந்தாலும் மண்ணுதான் போலிருக்கிறது. எந்த மதச்சார்பற்றும் ஒட்டுமொத்த மலேசியத் தமிழனாவது எதிர்ப்பை ஶ்ரீலங்கா அரசுக்கு காட்டுவார்கள் என்றால் எவனுமில்லை. நீங்கள் சொல்வதைப்போல மலாய்கார வேஷம் களைந்துவிடும் என அஞ்சுகிறார்களோ என்னவோ…? ஒரு கமலிடம் காட்டிய வீரத்தில் ஒரு சதவிகிதமாவது இருக்குமா என்றால் 0 % தான். பெட்டைத்தனம் நம்மைவிட்டு போகும் நாள் எந்நாளோ!
மலசியாவில் “கொம்பு தேனுக்கு “ஆசை பட்டு மதம் மாறும் தமிழனுக்கும் இந்த கதிதான் (கிலிங் கிலிங்தான் )!
இன்னும் இரண்டொரு நாளில் பெர்மிம் தலைவர் முன்னிலையில் மஸ்ஜித் இந்தியாவில் மாபெரும் கண்டன கூட்டம் நடைபெறும் என்று
எதிர்பார்க்கலாம்.