பாலிவுட்டில் கடந்த மார்ச் 7ம் தேதி மிகப்பெரிய அளிவில் வரவேற்பை வெற்ற திரைப்படம் க்வீன்.
கங்கணா ரனாவத் நாயகியாக நடித்த இந்தப் படத்தை விகாஷ் பால் இயக்க பாலிவுட்டின் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப்பின் தயாரித்திருந்தார். கிட்டத்தட்ட பனிரெண்டரை கோடியில் தயாராகிய இந்தப்படம் 97கோடி ரூபாய் வசூலித்துக் பாக்ஸ் ஆஃபீஸிலும் ஹிட் அடித்தது.
க்வீன் படம் யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றதால் அப்படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியில் பலத்த போட்டிக்கு நடுவே அந்தப் படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றினார் நடிகர் தியாகராஜன்.
அதுவும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகள் நான்கிலும் இந்தப்படத்தை ரீமேக் செய்யும் உரிமையை கைப்பற்றியுள்ளார். விரைவிலேயே படத்தின் ஒவ்வொரு மொழியிலும் ரீமேக்கில் நடிக்க இருக்கும் கதாநாயகிக்கான தேர்வு நடக்க இருக்கிறது. தற்போது தியாகராஜன் தனது மகன் பிரசாந்தை வைத்து ‘சாகசம்’ என்ற படத்தை மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்ட படமாக தயாரித்து வருகிறார்.