ரஷ்யாவுடன் உயர்மட்ட உறவை விரும்பும் மோடி

narendra_modizபுதுடெல்லி, ஜூன் 19-

ரஷ்ய துணை பிரதமர் திமித்ரி ரோகோசின் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்ததாக கூறினார்.

மேலும், இந்தியா-ரஷ்யா உறவை மேலும் வலுப்படுத்த மோடியுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் கூறினார். அப்போது ரஷ்யாவை இந்தியாவின் நம்பகமான மற்றும் சிக்கலான நேரங்களில் ஆதரவு அளித்த நட்பு நாடு என்று மோடி பாராட்டினார்.

மேலும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பை எதிர்நோக்கியிருப்பதாகவும் ரோகோசினிடம் மோடி தெரிவித்தார். ரஷ்யாவுடனான உறவை உயர்ந்த அளவிற்கு கொண்டு செல்வதற்கு விரும்புவதாக தெரிவித்த மோடி, கடற்படை திறன்களில் இந்தியா முக்கிய மைல் கல்லை எட்டுவதற்கு பங்களித்தமைக்காக நன்றி தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங், பிதமரின் முதன்மைச் செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஆகியோர் உடனிருந்தனர்.

TAGS: