சீனா தனது நட்புறவை இந்தியாவுடன் மேம்படுத்த விரும்புவதாக கூறி தொடர்ந்து அத்துமீறல்களை அரங்கேற்றி வருகிறது.
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்த சீனா, அவர்களது வெளியுறவு துறை அமைச்சரின் மூலம் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தை சமாதானதிற்கானது என குறிப்பிட்டிருந்த சீனா கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்களது இராணுவ ஹெலிகாப்டரை உத்தராகண்ட் மாநிலத்தின் வான் பகுதிக்குள் சுமார் 30கி.மீ தூரம் வரை ஊடுருவி பறந்துள்ளது.
இந்நிலையில் இந்திய எல்லையில் அத்துமீறி நுழைய மாட்டோம் என கூறிய சீனா இவ்வாறு செய்தது இந்தியாவின் இராணுவ படைகளிளை கொந்தழிக்க வைத்துள்ளது.
சீனாவின் அத்துமீறல் ஒருபுறம் இருக்கையில் மறுபுறம் சீன கப்பல் படை அதிகாரியான ரியல் அட்மிரல் ஹான் ஷியாகு மற்றும் தளபதி லி ஜியான்ஜூன் உட்பட அதிகாரிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.
மேலும் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள கிழக்கு பகுதி கப்பல்படை தலைமையகத்தில் இருநாட்டு ராணுவத்தின் முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்தாலும் , இந்தியாவின் எல்லை பகுதிகளில் மறைமுகமாய் சீனா ஊடுருவி வருவதை நிறுத்திய பாடில்லை.
தலைப்பே தவறு ,இந்தியாவின் கபட நாடகம் என்றல்லவா இருக்கவேண்டும்