புதுடெல்லி, ஜூன் 23- மத்தியில் மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கருப்பு பணம் தொடர்பான பட்டியலை இந்தியாவிற்கு வழங்க சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதனை நிதி மந்திரி அருண் ஜெட்லி மறுத்துள்ளார். கருப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல் தருவதாக சுவிட்சர்லாந்து அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று கூறிய ஜெட்லி, இது தொடர்பாக முறைப்படி சுவிட்சர்லாந்து அரசுக்கு கடிதம் எழுதப்படும் என தெரிவித்தார். மேலும், கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் பட்டியலை விரைவில் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.