பிரதமர் மோடி பிறப்பித்த 3 அதிரடி உத்தரவு

narendra_modizநரேந்திர மோடி, 3 முக்கிய விவகாரங்களில் கவனம் செலுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நல்ல நிர்வாகத்தை வெளிப்படுத்தி மக்களின் நன்மதிப்பைப் பெற வேண்டுமெனில் உடனடியாக 3 விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

முதலாவதாக, மத்திய – மாநில அரசுகளிடையேயான உறவை மேம்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதைத் தொடர்ந்து இரண்டாவதாக, பொதுமக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தெரிவிக்கும் பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தி அவற்றைப் போக்குதல் அவசியம் என்றும் மோடி கூறியுள்ளார்.

அத்துடன் இப்பிரச்னைகள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்காணிக்க பிரதமர் அலுவலகத்தில் சிறப்பு குழுவும் கூட அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மூன்றாவதாக, ராணுவத்தினருக்கு தேவையான ஆயுதங்கள் விரைவாக கிடைப்பதில்லை என்ற நீண்டகால புகாரை தொடர்ந்து, இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேலும், இதைத் தொடர்ந்து ராணுவத்தினருக்கு தேவையான ஆயுதங்கள் குறித்து வரிசைப்படுத்தி பட்டியல் வழங்கும்படி முப்படைகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS: