புதுடில்லி: வரவிருக்கும் பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு தாரளமாக இருக்கும் என்றும் நாட்டின் பலத்தை வலு<ப்படுத்த ஆயுதங்கள் வாங்கி குவிப்பதே மத்திய அரசின் முக்கிய இலக்காக இருக்கும் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அருண்ஜெட்லி கூறினார்.
மூத்த கடலோர காவல்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் ஜெட்லி நிருபர்களிடம் பேசுகையில்;
நிதி சூழல் சிக்கல் : தற்போது நிதிநிலை நாட்டின் பெரும் சவாலாக உள்ளது. இது விரைவில் சீர்படுத்தப்பட்டு பொருளாதாரம் மேம்படுத்தப்படும். கடலோர படையில் நடக்கும் விபத்துக்கள் குறித்து முறையான விசாரணை நடைபெற்று வருகிறது. ஈராக்கில் வாடும் இந்தியர்களை மீட்பது தொடர்பாக இந்தியாவில் இருந்து படைகள் அனுப்பி வைக்கப்படவில்லை . இது தொடர்பான யூகங்களின் அடிப்படையில் வரும் கேள்விக்கு பதில் அளிக்க விரும்பவில்லை.
வரவிருக்கும் பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். பாதுகாப்பு துறைக்கான செலவினங்கள் அதிரிக்கப்படும். இதன்மூலம் நமது தேவைகள் நிறைவேற்றப்படும். ஆயுதங்கள் கொள்முதலுக்கு முதலிடம் வழங்கப்படும். இவ்வாறு ஜெட்லி கூறினார்.