ஈராக்கில் சிக்கியுள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு பத்திரமாகத் திரும்ப வசதியாக அவர்களுக்கு இலவச விமான டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் கேரள மாநில அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உம்மன் சாண்டி இதனைக் கூறினார்.
கேரள மாநிலத்தவர்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய அரசு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்த உம்மன் சாண்டி, அவ்வாறு மத்திய அரசு வழங்காதபட்சத்தில், மாநில அரசே அந்த செலவை ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவித்தார்.