இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சி தொடர்பில் இந்திய தேசிய புலனாய்வு பிரிவு விசாரணை

indian_police_002தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதல்களை நடத்த இஸ்லாமிய தீவிரவாதிகளால் இலங்கை, மாலைத்தீவு மற்றும் மலேசியாவினூடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து இந்திய தேசிய புலனாய்வு பிரிவு விசாரணைகளை நடத்தவுள்ளது.

தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவர் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் தமிழக பொலிஸார் இது தொடர்பான விசாரணையை இந்திய தேசிய புலனாய்வு பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.

இலங்கையில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரத்தின் ஊடாகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தகவல் வெளியாகியது.

இதனையடுத்து இந்திய தேசிய புலனாய்வு பிரிவினர் இலங்கை, மாலைதீவு மற்றும் மலேசியாவுக்கு சென்று விசாரணைகளை முன்னெடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS: