சென்னை கட்டிட விபத்து: முதல்வர் வருகைக்காக மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டதா?

chennai_buidng_cm_visit_001சென்னை அடுக்குமாடி குடியிருப்பு விபத்து சம்பவத்தில் மீட்புப் பணிகளை நேற்று முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
சென்னை போரூர் மவுலிவாக்கத்தில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த 13 அடுக்கு மாடி கட்டிடம் கனமழையால் இடிந்து விழுந்துள்ளது.

இந்நிலையில், முதல்வர் மீட்பு பணியை பார்வையிட வந்தபோது, மீட்பு பணிகளை நிறுத்தியதோடு, முதல்வர் வசதியாக வந்து செல்வதற்காக வீடு கட்ட வைத்திருந்த மணலைக் கொட்டி தற்காலிகமாக சாலை அமைத்தல், முதல்வர் வரும் பாதையை சீர்படுத்துதல் போன்ற வேலைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த வேலைகளுக்கு, அந்த மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களைக் கொண்டே முதல்வருக்காக சில வசதிகளை ஏற்படுத்தும் வேலையில் இறங்கியதாகவும், இதன் காரணமாக மீட்புப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

TAGS: