பிஎஸ்எல்வி- சி 23 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு  மையத்தில் இருந்து இன்று காலை சரியாக 9.52க்கு பிஎஸ்எல்வி சி 23 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த ராக்கெட்டில் 5 செயற்கைக் கோள்கள் இணைக்கப்பட்டிருந்தன.

இந்த ராக்கெட் ஏவப்படுவதை நேரில் காண்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றே ஸ்ரீஹரிகோட்டா இந்திய விண்வெளி ஆய்வு மைய சதீஷ் தவான் வளாகத்துக்கு வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராக்கெட் ஏவப்பட்ட 2வது நிமிடத்தில் பிஎஸ்.1 தனியாக பிரிக்கப்பட்டது. பின்னர் பிஎஸ்2 இஞ்சின் தனது இயக்கத்தை தொடங்கியது.

பின்னர் 3வது நிமிடத்தில் பிஎஸ் 2 தனியாகப் பிரிக்கப்பட்டு, பிஎஸ் 3 இஞ்சின் இயக்கப்பட்டது.  இது திடநிலை எரிபொருள் கொண்டது.PSLV C23

TAGS: