சென்னை அடுக்குமாடி இடிந்ததில் இறந்தவர் எண்ணிக்கை 24ஆக உயர்வு

building_in_chennaiசென்னை அருகே அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 24ஆக உயர்ந்திருக்கிறது.

இதுவரை 24 பேர் உயிருடன் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சுமார் 20 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த 11 மாடிக் கட்டிடம் சனிக்கிழமை பெய்த பெரும் மழையில் இடிந்து விழுந்தபோது 70க்கும் அதிகமான கட்டுமானத் தொழிலாளர்கள் அந்தக் கட்டிடத்துக்குள் இருந்ததாகத் தெரிகிறது.

கொல்லப்பட்டவர்களில் 15 பேரின் அடையாளம் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் பலியானோரில் பெரும்பாலானோர் அண்டை மாநிலமான ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சம்பவம் நடந்தபோது கட்டிடத்துக்குள்ளிருந்து, தங்கள் ஊதியத்தைப் பெற்றுக்கொண்டிருந்தனர் என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் தேசியப் பேரிடர் நடவடிக்கைப் படையினர் உட்பட நூற்றுக்கணக்கான மீட்ப்பணியாளர்கள் இந்த இடத்தில் உயிருடன் தப்பியவர்களை மீட்க உபகரணங்களுடன் ஈடுபட்டிருக்கின்றனர்

இந்த விபத்தின் காரணம் விசாரிக்கப்பட்டுவருகிறது என்றாலும், கட்டுமான விதிகள் இல்லாதது, பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்தாமல் விடுவது, ஆகியவை இந்தியாவில் கட்டுமானத் திட்டங்களில் அடிக்கடி நிகழும் விபத்துக்களுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. -BBC

TAGS: