126 நவீன போர் விமானங்களை பிரான்சிடம் வாங்குகிறது இந்தியா?

fighting jetபுதுடில்லி: பிரான்ஸ் நாட்டின், ‘தாசல்ட் ஏவியேஷன்’ நிறுவனம், ரபாலே ரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. நவீன 126 போர் விமானங்களை வாங்க, 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் தொடர்பாக, விமான உற்பத்தியாளர்களிடம் ஏற்கனவே, தொழில்நுட்ப ரீதியிலான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று உள்ளன. அதனால், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, இந்த போர் விமான ஒப்பந்தத்தை முடிவு செய்ய வேண்டிய இறுதிக் கட்டத்தில், மத்திய அரசு உள்ளது. விமானங்களுக்கான, 1 லட்சம் கோடி ரூபாய், 10 ஆண்டுகளுக்கு பிரித்து வழங்கப்படும். விமானப் படையில், தற்போது, 39 போர் விமான தொகுப்புகள் உள்ளன. மேலும், 39 தேவை என, அதிகாரிகள் விரும்புகின்றனர். அதனால், போர் விமானங்களின் தேவை குறித்து, ராணுவ அமைச்சர் அருண் ஜெட்லியிடம், ஏற்கனவே விமானப்படை அதிகாரிகள் விவரித்துள்ளனர். எனவே, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பேபியசின் தற்போதைய, இந்திய பயணத்தின் போது, ரபாலே விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் இறுதியாகலாம் என, நம்பப்படுகிறது.

TAGS: