இந்திய எல்லைப்புற மக்களுக்கு ராணுவ பயிற்சி : மத்திய அரசு புதிய திட்டம்

இந்திய – சீன எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை எதிர்கொள்ளும் வகையிலும், தங்களை தற்காத்துக் கொள்ளவும் அங்கு வாழும் மக்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அண்டை நாடுகளுடன் எப்போதும் நட்புறவையே விரும்பினாலும், அவர்களது ஊடுருவல்களை எந்த நேரத்திலும் சமாளிக்கும் வகையில் இந்தியாவை தயார் படுத்துவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

அந்த வகையில், எல்லைப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு துணை ராணுவ பயிற்சியும், ஆயுதப் பயிற்சியும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

TAGS: