உச்ச நீதிமன்ற நீதிபதி நியமன விவகாரம்: தலைமை நீதிபதியின் கருத்துக்கு பிரதமர் வருத்தம்

உச்ச நீதிமன்ற நீதிபதி நியமன விவகாரத்தில் பா.ஜ.க அரசு நடந்து கொள்ளும் முறை குறித்து தலமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்தால் பிரதமர் நரேந்திரமோடி வருத்தம் அடைந்துள்ளார். முன்னதாக

முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வக்கீலுமான கோபால் சுப்பிரமணியம் உள்பட 4 பேரை உச்ச நீதிமன்றா நீதிபதிகளாக நியமிக்குமாறு மூத்த நீதிபதிகள் குழு  பரிந்துரை செய்து அனுப்பிய கோப்பை பரிசீலித்த மத்திய அரசு, கோபால் சுப்பிரமணியத்தின் பெயரை மட்டும் மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டது.

இதையடுத்து தில்லியில் நேற்று முன்தினம் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி பி.எஸ்.சவுகானுக்கு நடைபெற்ற பிரிவுபசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகளுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்று இருந்தவர்களில் 3 பேருக்கு ஒப்புதல் அளித்துவிட்டு, கோபால் சுப்பிரமணியத்தின் பெயரை விலக்கிக்கொண்டது ஒருதலைப்பட்சமானது என்று கூறினார்.

இந்நிலையில் தலைமை நிதிபதியின் இக்கருத்து வருந்ததக்கது.நீதித்துறையுடன் மோதல் போக்கை கடைபிடிக்க அரசு நினைக்கவில்லை எனவும், நீதிபதிகள் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கோபால் சுப்பிரமணியம் விவகாரத்தில் தலையிட்டதன் மூலம், ஆபத்தான பாதையில் அடி எடுத்து வைத்திருப்பதாக முன்னாள் மத்திய சட்ட அமைசச்சர் வீரப்பமொய்லி விமர்சித்துள்ளார்.

TAGS: