பிரதமராகப் பதவியேற்ற பிறகு நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு முதல் முறையாக வெள்ளிக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், “காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி’ என்று பாகிஸ்தான் வியாழக்கிழமை கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் தஸ்னீம் அஸ்லாம் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைந்திருப்பதாகக் கூறப்படுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே அல்ல.
எங்களைப் பொருத்தவரையில் காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி என்றே கருதுகிறோம் என்று தெரிவித்தார்.
இதற்கு ஜம்மு-காஷ்மீர் தனது அங்கம் என இந்தியா திட்டவட்டமாக பதிலளித்துள்ளது.
பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவுக்கு வெள்ளிக்கிழமை காலை செல்கிறார்.