நிறைவடைந்தது மவுலிவாக்கம் மீட்பு பணி: 67 பேர் பலி, 27 பேர் மீட்பு

building_collapse_001சென்னையில் மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடி கட்டிடம் விபத்துப் பகுதியில் கடந்த 7 நாட்களாக நடந்து வந்த மீட்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மவுலிவாக்கத்தில் பிரைம் சிருஷ்டி என்ற கட்டுமான நிறுவனத்தினர் கட்டிவந்த 11 அடுக்குமாடி குடியிருப்பு கடந்த 28ம் திகதி இடிந்து விழுந்தது.

இதனையடுத்து, அன்று மாலை முதல் தீயணைப்புத் துறையினர், காவல்துறையினருடன் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அனைவரும் இணைந்து பணியாற்றிய மீட்புப் பணியில் 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டதோடு, 61 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், உயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாலேயே மீட்புப் பணிகள் மெதுவாக நடத்தப்பட்டது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை 7 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்டது மிகப்பெரிய சவாலாக இருந்தது என்றும் 7 நாட்களில் 27 பேரை உயிருடன் மீட்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மீட்புப் பணிகளை நிறைவு செய்வதற்கு முன்னர் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

TAGS: