ஈராக்கில் தீவிரவாதிகள் கண்ணியமாக நடந்து கொண்டதாக, இந்தியா திரும்பிய தூத்துக்குடி செவிலியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் இருந்து விமானம் மூலம் கொச்சி திரும்பிய 46 செவிலியர்களில் ஒருவரான தூத்துக்குடியைச் சேர்ந்த மோனிஷா என்பவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் இதுபற்றி தெரிவிக்கையில், நாங்கள் அனைவரும் பெண்கள் என்பதால் அவர்கள் எங்களை ஒன்றும் செய்யவில்லை, எங்களிடம் அவர்கள் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொண்டனர்.
எங்களை எப்போது இந்தியாவுக்கு விடுவீர்கள் என்று கேட்டோம். அதற்கு உங்களை ஒன்றும் செய்யமாட்டோம், கண்டிப்பாக விட்டுவிடுவோம் என்று கூறினார்கள்.
இதையடுத்து மறுநாள் காலை வந்து நீங்கள் இந்தியாவுக்கு செல்லலாம், என்றும் உங்கள் பொருட்களை எல்லாம் எடுத்து தயாராக இருங்கள் எனவும் தெரிவித்தனர்.
பின்பு எங்களை ஒரு பேருந்தில் ஏற்றிக்கொண்டு மொசூல் எல்லையில் விட்டுச்சென்றனர். அங்கிருந்து தூதரக அதிகாரிகள் எங்களை விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும், தூதரக அதிகாரிகளும், இந்திய அரசும் தான் நாங்கள் விடுதலையாக காரணமாக இருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.
செவிலியர்களே இனிமேல்தான் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு? நான் சொல்ல ஒன்றும் இல்லை உலகமே அறியும்.