முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்குச் சொந்தம்

mullaiperiyarமுல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப் பள்ளம், துணக்கடவு ஆகிய அணைகள், தமிழ்நாட்டினால்தான் இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன என்றும், இந்த அணைகள் தமிழ்நாட்டிற்குச் சொந்தமானவை என்ற கோரிக்கையும் அணைப் பாதுகாப்புத் தேசியக் குழுவினரால் ஏற்கப்பட்டுள்ளன என்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ள ஜெயலலிதா, தி.மு.க. அங்கம் வகித்த, முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மூலம் தி.மு.க. தலைவர் கருணாநிதியால் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட துரோகம் தன்னால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நதி நீதி இணைப்பு விவகாரத்தில் கருணாநிதி எதையுமே செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக, முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப் பள்ளம், துணக்கடவு அணைகள் கேரள மாநிலத்திற்குத்தான் சொந்தம் என அம்மாநில முதல்வர் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டி, இது தொடர்பாக தமிழக அரசு ஏன் தன் எதிர்ப்பைப் பதிவுசெய்யவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டிருந்த அறிக்கைகளுக்குப் பதிலாக முதலமைச்சர் ஜெயல்லிதா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். -BBC

TAGS: