இந்தியாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக இந்தியாவின் வறுமை அளவுகோல் சம்பந்தமாக ஆராய்ந்த அரசாங்கத்தின் நிபுணர் குழுவிருடைய பரிந்துரை காட்டுகிறது.
மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான நிபுணர் குழு இந்தியாவில் வறுமைக் கோட்டின் அளவை மீண்டும் வரையறுத்துள்ளது.
கிராமப்புறங்களில் நாளொன்றுக்கு ரூ.32க்கு குறைவான செலவுசெய்யும் திறனும் நகர்ப்புறங்களில் ரூ.47க்கு குறைவான செலவுத் திறனும் இருப்பவர்களே வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களாக கருதப்படுவர் என்பதாக இந்த நிபுணர் குழுவின் பரிந்துரை அமைந்துள்ளது.
2011-12 ஆம் ஆண்டு சுரேஷ் டெண்டுல்கர் தலைமையிலான குழு கிராமப்புறங்களில் ரூ.27 என்றும் நகர்ப்புறங்களில் ரூ.33 என்றும் பரிந்துரைத்திருந்த அளவு பெரும் விவாதங்களையும் கண்டனங்களையும் ஏற்படுத்திருந்த சூழ்நிலையில், ரங்கராஜன் தலைமையில் இந்த அளவுகளை மீள்பரிசீலனை செய்ய அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.
தற்போதைய வரையறையின் கீழ் பார்க்கையில், இந்தியாவில் முப்பத்து ஆறு கோடிப் பேருக்கும் அதிகமானோர் அதாவது நாட்டின் ஜனத்தொகையில் 29.5 சதவீதமானோர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக ஆகிறது.
ஆனாலும் 2009-10 ஆண்டில் செய்யப்பட்ட மதிப்பீட்டில் இந்தியாவில் 38.2 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்ந்திருந்தனர்.
இந்தியாவில் ஆட்சிக்கு வந்துள்ள பாஜக அரசாங்கம் தனது முதல் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்யவுள்ள நிலையில் வறுமைக் கோட்டின் புதிய அளவுகள் சர்ச்சையை தோற்றுவிக்கும் என்று கருதப்படுகிறது.
வறுமையை வரையறுக்கும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை யதார்த்தத்துக்கு பொருத்தமில்லாத அர்த்தமற்ற காரியமாக இருக்கிறது என பிபிசி தமிழோசையிடம் பேசிய இடதுசாரி பொருளியல் வல்லுநர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறினார்.
“வறுமைக் கோடு என்பதை விட சாகாக் கோடு என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பணம் இருந்தால் சாகாமல் இருக்கலாமே ஒழிய, அதை வைத்து வாழ முடியாது” என்று அவர் குறிப்பிட்டார். -BBC
காந்தி குடுத்த சுதந்திரம் ,,,,,,,,,,,,அதற்கு கிடைத்த பரிசு
உலகில் அதிகம் பிச்சை காரர்களும் ..படிப்பு அறிவு இல்லாதவர்களும் இந்தியாவிலேயே அதிகம் ….கையெழுத்து வைக்க தெரியாதவர்கள் தங்க தமிழகத்தில் அதிகம் முழு இந்தியாவில் ..இந்த அழகில் இவர்கள் திரைப்படங்களும் ..வெற்று மேடை பேச்சு களும் எதோ சுவர்க்கம் என்று காட்டுகின்றன….இன்னும் 3000 வருடங்களின் பின் கூட இந்தியா (பிரிட்டிஷ் கரன் வர முதல் இப்படி ஒரு நாடு கிடையாது )பிச்சை கர நாடாகவே இருக்கும்
ஒரு நாட்டை பிச்சைக்கார நாடாக ஆக்குவதும் பணக்கார நாடாக ஆக்குவதும் அரசியல்வாதிகளின் கையில் தான் உள்ளது. அதுவும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் எல்லா வளமும், வசதியும், வாய்ப்புக்களும் உள்ள ஒரு நாட்டில் ஏழ்மை என்னும் பேச்சுக்கே இடமில்லை. ஒரு வேளை பா.ஜ.கா. நல்ல ஆட்சியை வழங்கினால் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கும்.