ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இந்தியர்களும் இணைந்துள்ளதாக திடுக்கிடும் தகவல் ஒன்றை உளவுத்துறை தெரிவித்துள்ளது.
ஈராக்கில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி உலகையே உலுக்கி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இந்தியாவிலிருந்து 18 பேர் சேர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை உளவுத்துறை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த 18 பேர் சிரியாவிலும் ஈராக்கிலும் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதரங்களை அந்த அமைப்பே வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து உளவுத்துறை விடுத்த அறிக்கை ஒன்றில் கூறியதாவது, யூடூப் மற்றும் பல சமூக வலைத்தளங்களின் மூலமாக தான் இளைஞர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேருவதற்கான உத்வேகம் ஊட்டப்படுவதாகவும், அதன்விளைவாக தேசம் கடந்து பலரும் ஈராக், சிரியாவுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் போரில் ஈடுபட்டுள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என்றும் இனியும் இதுபோல் தீவிரவாத அமைப்புகளில் இந்தியர்கள் சேர அனுமதிக்க கூடாது எனவும் அரசுக்கு உளவுத்துறை எச்சிரிக்கை விடுத்துள்ளது.
இதேபோல் மேற்கெத்திய நாடுகளிலும், அமெரிக்காவிலும் புனித போர் என்ற பெயரில் ஜிகாதிகள் ஆள் பிடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. – New India News

























