தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக காமெடி என்றால் அது சந்தானமாகவே இருந்து வந்தது. ஆனால் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் ஹீரோ வேஷம் கட்டியதால், தற்போது சூரி தான் எல்லோர் விரும்பும் நகைச்சுவை நடிகராகிவிட்டார்.
முன்பெல்லாம் அனைத்து ஹீரோக்களுடன் வா, போ என்று பேசுவது மட்டுமில்லாமல், மாமா, மச்சான் அளவிற்கு நட்பாக இருந்து வந்தார் சந்தானம்.ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை அனைத்து ஹீரோக்களும் தற்போது சந்தானத்தை எதிரியாக பார்ப்பது மட்டுமில்லாமல், போட்டி நடிகராகவும் பார்க்க ஆரம்பித்துவிட்டனராம். இதற்கெல்லாம் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் வெற்றி தான் காரணமாம்.