தமிழுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை: கவிஞர் வைரமுத்து வேதனை

vairamuthuதமிழ் மொழிக்கு செம்மொழிக்கு உரிய உயரம் இதுவரை கிடைக்கவில்லை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா அரங்கில் கவிஞர் வைரமுத்துவின் மணிவிழா நடைபெற்றுள்ளது.

இதில் பேசிய கவிஞர் வைரமுத்து, உலக நாகரிக வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்த பெரிய மொழி தமிழ் மொழி.

படைகலன் மூலம் நாட்டை ஆளக்கூடாது என்பதையும் அறத் தால் நாட்டை ஆள வேண்டும் என்பதையும், சொல்லிக் கொடுத்தவன் தமிழன்.

மேலும், ஜாதிக்கு எதிராக சித்தர்கள் காலத்திலேயே குரல் கொடுத்தது நமது தமிழர் இனம்தான்.

ஆனால், தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தாலும், செம்மொழிக்குரிய உயரம் இதுவரை கிடைக்கவில்லை.

அதேபோன்று உலகின் தொன்மையான மொழிகளின் பட்டியலில் தமிழ் இல்லை, உலகின் தொன்மையான காவியங்களிலும் தமிழ் இல்லை. இது எவ்வளவு வேதனையான ஒன்று?

யுனெஸ்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் அழியும் மொழிகளின் பட்டியலில் தமிழ் 8-வது இடத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், பாரம்பரியமிக்க தமிழ் மொழியை நாம் இழந்தால் 3 ஆயிரம் ஆண்டுகள் சேர்த்து வைத்த செல்வத்தை இழப்பது போலாகிவிடும் என்றும், பள்ளிகளில் தமிழ்வழிப் பாடம் மிக முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.

TAGS: