தமிழகத்தை தவிர்த்து இலங்கை விவகாரத்தைக் கையாளுகிறார் மோடி: ஆந்திராவில் பல மில்லியன் டொலர்களில் இலங்கை முதலீடு!

modi_mahinda_jaya_001சில தினங்களிற்கு முன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அவர்கள் சந்தித்தது தொடர்பாக ஆச்சரியமளிப்பதாகவும், அதிர்ச்சியூட்டுவதாகவும் பல செய்திகள் வெளியாகின.

இது தொடர்பான திறந்த ஆய்வொன்றை மேற்கொள்வதற்காக லங்காசிறி வானொலி நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுதர்மா அவர்களை இணைத்திருந்தது.

இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,

தமிழர்களைப் பொறுத்தவரையிலும் ஐ.நா.வினால் ஆரம்பிக்கப்படவுள்ள மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக் காலகட்டத்தில் இந்த விஜயம் வியப்போடு பார்க்கப்படுகிறது.

கடந்த ஆட்சிகளில் இலங்கைத் தீவைப் பொறுத்தமட்டிலான கொள்கை விவகாரங்களில் தமிழகத் தலைவர்களின் கருத்துக்கள் ஓராளவிற்காவது உள்வாங்கப்பட்டன.

இனிமேல் ஐ.எப்.எஸ் எனப்படுகின்ற இந்திய வெளியுறவுத்துறை, பிரதமர் அலுவகம், பாதுகாப்புத்துறை மற்றும் டெல்லியை மையமாகக் கொண்ட உலக பொருளாதார மயமாக்கிற்கான திட்டக்குழு என்பனவே இந்த வேலையில் ஈடுபடும்.

கடந்த ஆறு வாரத்தில் மாத்திரம் 249 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த வருடத்தில் மொத்தம் 805 பேர் விடுதலை செய்யயப்பட்டுள்ளனர்.

கடந்த ஐந்து வருட காலத்தையும் ஒப்பிடும் போது விடுதலை செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கையில் இந்த வருடமே முதன்மை வகிக்கிறது.

ஆந்திராவில் விசாகப்பட்டினத்தில் இலங்கை 1.2 பில்லியன் டொலர்களை (1,200 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) ஆடை உற்பத்தித்துறையில் முதலிட்டு 38,500 இந்தியருக்கு வேலைவாய்ப்பை கொடுத்திருக்கிறது.

டெல்கி செல்வதற்கு முன்பு ஜீ.எல்.பீரிஸ் ஆந்திரப் பிரதேச முதல்வரை சந்தித்து தங்களது முதலீட்டுத் திட்டம் பற்றிக் கதைத்துள்ளார்.

தற்போதைய பாரதிய ஜனதாக் கட்சியின் அரசு இலங்கையின் ஸ்திரத்தன்மை, இந்தியாவுடனான பொருளாதாரத் தொடர்பு மற்றும் சீனாவின் இலங்கையுடனான உறவின் ஸ்திரத்தைத் குறைத்தல் என்பவற்றிக்கு அடுத்தபடியாக இலங்கைத் தமிழர் பிரச்சினையை எடுத்து நோக்கும்.

தமிழர்களின் மாகாண சபைகளிற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க இராஜதந்திர வழிகளில் முயற்சிக்கும் என்பது திண்ணம்.

ஏனென்றால் அவ்வாறனதொரு தீர்வு இடம்பெறாவிட்டால் இலங்கையின் ஸ்திரத்தன்மை, இந்தியாவுடனான பொருளாதாரத் தொடர்பு மற்றும் சீனாவின் இலங்கையுடனான உறவின் ஸ்திரத்தைத் குறைத்தல் என்பவற்றை இந்தியாவால் நடைமுறைப்படுத்த முடியாது என்பது உட்பட பல விளக்கமான புதிய தகவல்களை சுதர்மா வெளிப்படுத்தினார்.

TAGS: