இலங்கை போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ்.ராமதாஸ் விடுத்த கோரிக்கையை இந்திய மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைக் குழு இன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவிற்கு இலங்கை செல்ல அனுமதி மறுக்கப்பட்டால் சென்னையில் தங்கியிருந்து விசாரணை நடத்த அனுமதியளிக்கப்பட வேண்டுமென ராமதாஸ் கோரியிருந்தார்.
எனினும், இந்தக் கோரிக்கையை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் நிராகரித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக விசாரணை நடாத்த அனுமதிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மட்டுமன்றி சார்க் நாடுகள் அனைத்துமே விசாரணைக்குழுவினர் சாட்சியங்களைத் திரட்ட அனுமதிக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகை மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை குறித்த போர்க்குற்ற விசாரணைகளை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
அட…, நீ செய்யும் ஜாதி அரசியலை ஒரு முடிவுக்கு கொண்டு… !
யார் வந்தாலும் இலங்கை தமிழர்களுக்கு ஓர் விடுவு காலம் இல்லை.
மீண்டும் இன்னொரு பிரபாகரன் வந்தால்தான்
யார் வந்தாலும் இலங்கை தமிழர்களுக்கு ஓர் விடுவு காலம் இல்லை.
அப்படியெல்லாம் சட்டென்று ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள். அவர்களுக்கும் நல்ல காலம் பிறக்கும். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அங்கு சமாதானம் நிலவ பிரார்த்தனைச் செய்யுங்கள். தமிழக அரசியல்வாதிகளை நிராகரியுங்கள். அவர்கள் பேசுவது அரசியல்!
எங்கு அரசியல் இல்லை. அரசியல் என்பதை முதலில் என்னவென்று தெரிந்துக்கொள்ளுங்கள் பின் சபையில் அரசியல் பேசுவோம்.அரசியல் ஒரு கடல்.
(உங்கள் கருத்து திருத்தப்பட்டுள்ளது. ஆ.ர்.)