இந்தியாவில் போர் தொடுப்போம்: தீவிரவாத அமைப்புகளுக்கு சலாஹூதீன் அழைப்பு

terrorist_invites_jihads_001தலீபான்-அல்கொய்தா தீவிரவாத அமைப்புகளை இந்தியாவிற்கு எதிராக போராட ஜிஹாத் கவுன்சில் அமைப்பின் தலைவன் சலாஹூதீன் அழைப்பு விடுத்துள்ளான்.

ஈராக் நாட்டில் ஆட்சியை நிலைநாட்டி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபூபெக்கர் அல்-பாக்தாதி இந்தியா மீது போர் தொடுக்கப்போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

இதனைதொடர்ந்து ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் அமைப்பின் தலைவன் சையத் சலாஹூதீன் காஷ்மீரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதாவது, அல்கொய்தா, தலீபான் மற்றும் இதே கொள்கையில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மற்றும் நாடுகள், இந்திய அரசுக்கு எதிரான விடுதலை இயக்கத்திற்கு உதவி செய்ய வேண்டும்.

இந்திய இராணுவம் காஷ்மீரில் பயங்கரவாத ஆட்சிப்புரிந்து வருகிறது என்றும் அங்குள்ள ஒடுக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு அளித்தால் அதனை நாங்கள் வரவேற்போம் எனவும் தெரிவித்துள்ளான்.

TAGS: