நதிகள் இணைப்புத்திட்டத்தை கேரளா அனுமதிக்காது: உம்மன் சாண்டி

ummanதிருவனந்தபுரம், ஜூலை 17-

பம்பை-அச்சன்கோயில் நதிகளை தமிழகத்தின் வைப்பாறு நதியுடன் இணைக்கும் திட்டத்தை கேரளா அனுமதிக்காது என்று முதல்வர் உம்மன் சாண்டி திட்டவட்டமாக தெரிவித்தார்.

கேரள சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன், நதிகள் இணைப்பு தொடர்பான பிரச்சினையை எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் உம்மன் சாண்டி, நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் நதிகள் வறண்டுவிடுவது மட்டுமல்லாமல், பெரிய அளவில் சுற்றுச்சூழல் அழிவு ஏற்படும் என்று குறிப்பிட்டார்.

“பம்பை, அச்சன்கோவில் நதிகளில் உபரி நீர் இல்லை என்று டெல்லி ஐஐடி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி வரும் ஆண்டுகளில் இந்த நதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தால் மாநிலத்தில் உள்ள 2004 ஹெக்டேர் காடுகள் மூழ்கடிக்கப்படும்.

இந்த திட்டத்தை செயல்படுத்தனால், வேம்பநாடு ஏரி மற்றும் நெற்களஞ்சியமாக விளங்கும் குட்டநாடு ஆகிய பகுதிகள் கடும் வறட்சியை சந்திக்க வேண்டியிருக்கும். நதிகள் இணைப்பு திட்டத்திற்கு எதிராக சட்டசபையில் 2003ல் ஆண்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார் உம்மன் சாண்டி.

TAGS: