அம்பானிகளுக்கு “செக்” வைக்கும் மோடி

modi_controls_ambani_001காங்கிரஸ் ஆட்சியில் தாங்கள் நினைத்ததை சாதித்து கொண்ட அம்பானி சகோதரர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடிவாளம் போடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மன்மோகன் சிங்கின் ஆட்சியின் போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆட்சியை செலுத்தி வந்துள்ளனர்.

அப்போது அம்பானி குழுமத்திற்கு எதிராக இருந்த பெட்ரோலிய அமைச்சர்கள் இவர்களால் தூக்கியடிக்கப்பட்டனர்.மேலும் கோதாவரி-கிருஷ்ணா படுகொலையில் அம்பானி குழுமம் எடுக்கும் இயற்கை எரிவாயுவுக்கு உரிய விலை அதிரடியாக இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டு பெரும் சர்ச்சையும் வெடித்துள்ளது.

இந்நிலையில் முந்தைய ஆட்சியை போலவே மத்திய அரசினை அம்பானிகளுக்கு விட்டுக்கொடுக்காமல் தீர்மானிக்கும் சக்திகளை தான் கையாள வேண்டும் என்பதில் மோடி மிக தெளிவாக இருந்துள்ளார்.

இதை பிரதிபலிக்கும் வகையில் அண்மையில் கூட அருண் ஜெட்லி பேசியதாவது, ரிலையன்ஸ் தோண்டி எடுக்கும் இயற்கை எரிவாயுவுக்கான விலையை ஏன் டொலரில் நிர்ணயிக்க வேண்டும்? இந்திய ரூபாயில் நிர்ணயித்தால் போதுமானது என கூறியுள்ளார்.

இதேபோல் இயற்கை எரிவாயு உற்பத்தி குறைவைக் காரணம் காட்டி அம்பானி குழுமத்துக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னர் இயற்கை எரிவாயு விலையை ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டுக்கு 4.2 டொலர் என்ற விலையில் இருந்து 8 டொலருக்கு ரங்கராஜன் குழுமம் பரிந்துரைப்படி மத்திய அரசு உயர்த்தியது.

ஆனால் இந்த ரங்கராஜன் குழுமத்தின் பரிந்துரையை, தற்போது மோடி அரசு நிராகரிக்கலாம் என கூறப்படுகிறது.

அம்பானிகளுக்கு தலைவணங்கி நிற்காமல், அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் தான் மோடி வைக்கின்றார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

TAGS: