பா.ஜ.க கட்சி தலைவர் அமித்ஷாவிடம் மாநில சட்டசபை தேர்தல்களில் நாங்கள் எந்த உதவியும் செய்ய மாட்டோம் என ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் உதவி செய்தது. மேலும் மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர் ஆர்.எஸ்.எஸ் விருப்பத்தை மீறி அமித்ஷா பாஜக தலைவராக்கப்பட்டார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு அமித்ஷா சென்றுள்ளார். அங்கு ஆர்.எஸ்.எஸ்.இயக்கத் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தியுள்ளார்.
அப்போது, சட்டசபை தேர்தல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உதவியை எதிர்ப்பார்க்க வேண்டாம் என்று அமித்ஷாவிடம் கூறப்பட்டதாக தெரிகிறது.
அது மட்டுமல்லாமல் டெல்லியில் பெரும்பான்மை பெறாத நிலையில் பாஜக ஆட்சி அமைக்கக் கூடாது. மீண்டும் தேர்தலை தான் சந்திக்க வேண்டும் என்றும் அமித்ஷாவுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.