ஹாலிவுட் படம் தயாரிக்கிறார் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரன்

மறைந்த பிரபல நடிகர் எம்.அர்.ராதாவின் கொள்ளுப்பேரனும், மறைந்த நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் பேரனுமான பிரபாகரன் ஹரிஹரன்.

இவர் தன்னுடைய சொந்த நிறுவனமான ‘ஹரிகேன் ஸ்டுடியோஸ்’ சார்பில் ஒரு ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து படம் தயாரிக்கவுள்ளார்.  சமீபத்தில் இது தொடர்பாக ஹாலிவுட் நிறுவனத்துடன் சந்திப்பு நடத்தியுள்ளனர்.

அனிமேஷன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் பட்ஜெட் 45 மில்லியன் டாலர்ஸ் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதுவும் இந்தப் படம் பிரிமேன் டவுன் மியூசியன்ஸ்  என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது.  இதுதவிர, ஹரிகேன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ‘வோல்பெஃல்’ என்கிற இன்னொரு அனிமேஷன் படத்தையும் தயாரிக்க உள்ளனர்.

இப்படத்தில் பிரபல இந்திய நட்சத்திரங்களுடன் ஹாலிவுட் நட்சத்திரங்களும் நடிக்க இருக்கிறார்களாம். இந்த இரண்டு படங்களும் உலகரங்கில் இந்திய தொழிழ்நுட்ப கலைஞர்களின் திறமையை பறைசாற்றும் என்கிறார் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரன்.